கேத்தரின் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டால்பின் மூக்குப் பகுதியில் இருந்து கேத்தரின் அருவியின் தோற்றம்

கேத்தரின் அருவி (Catherine Falls) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் உள்ள ஓர் இரட்டை அருவியாகும்.  இது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து அரவேணு பிரிவு சாலையில் உள்ளது. கோத்தகிரியின் முதன்மையான சுற்றுலா தலமான இது, மிக உயரமான இடத்திலிருந்து தரையில் வந்து விழுகிறது. அருவி விழக்கூடிய மலை நீலகிரி மலைகளில் இரண்டாவது மிக உயர்ந்த இடமாக உள்ளது. இந்த அருவியின் உயரம் ஏறக்குறைய 250 அடி ஆகும். இந்த அருவிக்கு எம்.டி. கோக்பர்ன் என்பவரின் மனைவியின் பெயர் சூட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இவரால்தான் கோத்தகிரியில் காபி தோட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. கேத்தரின் அருவியின் பூர்வீக பெயர் கெட்டிஹாட ஹல்லா என்பதாகும். இதன் பொருள் டோல் ஆற்று அடிவாரம் என்பதாகும். இந்த அருவியை முழுமையாக பார்க்கவேண்டுமானால் டால்பின் மூக்கு என்ற இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும், என்றாலும் ஒரு சாலையில் அருவியின் உச்சியை பார்ப்பது  சாத்தியம்.[1][2][3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_அருவி&oldid=3356426" இருந்து மீள்விக்கப்பட்டது