டார்வினின் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்வினின் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோடெர்மட்டிடே
பேரினம்:
ரைனோடெர்மா
இனம்:
R. darwinii
இருசொற் பெயரீடு
Rhinoderma darwinii
(Duméril & Bibron, 1841)

டார்வினின் தவளை (R. darwinii) என்பது அர்ஜென்டினா மற்றும் சிலி காடுகளின் நீரோடைகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறிய தவளை ஆகும். HMS பீகிள் பயணத்தின் போது சார்லஸ் டார்வின் இத்தவளையைக் கண்டறிந்தார்.

புறஅமைப்பு[தொகு]

இத்தவளை 2.5 முதல் 3.5 செ.மீ நீளமே உடையது. உடல் முழுதும் அடர் மஞ்சள் நிறமும், பச்சை அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளும் கொண்டு காணப்படும்.

வித்தியாசமான இனப்பெருக்கமுறை[தொகு]

பெண் தவளை 40 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகளை ஆண் தவளை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளும். தலைப்பிரட்டைகள் பொரிந்து வந்ததும் அவற்றைத் தன் நாக்கினால் எடுத்து தன் குரல் பையில் (vocal sac) போட்டுக் கொள்ளும். தலைப்பிரட்டைகளின் உருமாற்ற வளர்ச்சி தந்தையின் குரல்பையில் தொடர்ந்து நடைபெறும். அவை சுமார் 1 செ.மீ அளவு பெரிதாக வளர்ந்ததும் தந்தையின் குரல் பையை விட்டு வெளியேறும். அப்படி வெளியேறும் சில தலைப்பிரட்டைகளை தான் நீண்டநாட்களாக உணவுண்ணாத காரணத்தினால் ஆண்தவளை தின்றுவிடும்.

உணவு[தொகு]

இது பூச்சிகள், சிலந்திகள் மற்றும் சிறு புழுக்களை உணவாகக் கொள்ளும். வேட்டையாடும் இதுவே வேட்டையாடப் படலாம் என்பதால் எதிரியைக் கண்டால் உலர்ந்த இலைகளுக்கிடையில் இலை போல மறைந்து கொள்ளும்.

இவற்றையும் காண்க[தொகு]

முரண்பாடான தவளை

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்வினின்_தவளை&oldid=2629354" இலிருந்து மீள்விக்கப்பட்டது