டார்க் (தொலைக்காட்சி தொடர்)
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
டார்க் ஒரு அறிவியல் புனைகதையை மையமாக கொண்ட ஜெர்மானிய வலைத்தொடராகும்.இதை உருவாக்கியவர்கள் முறையே பாரன் போ ஒடார் மற்றும் ஜாண்ட்ஜி ப்ரீசி ஆகியோர். விண்டன் எனும் கற்பனையான ஒரு நகரில் நடப்பதாக கட்டமைக்கப்பட்ட இந்த தொடர் ஒரு சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போனதை தொடர்ந்து அந்த நகரில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் நான்கு குடும்பங்களுக்கு இடையேயான தொடர்புகளையும்,ரகசியங்களையும் மெல்ல வெளிக்கொணர்வதோடு விரும்பத்தகாத காலப்பயணத்தையையும் கட்டவிழ்க்கிறது. டார்க் காலத்தினால் மனிதனின் வாழ்க்கையில் எழுதப்படும் இருண்ட பக்கங்களை புரட்டிச்செல்கின்றது.
டார்க் நெட்ப்லிக்ஸ்-ன் முதல் ஜெர்மானிய மொழி தொடராகும்,1 திசம்பர் 2017 முதல் இது நெட்ப்லிக்ஸ்-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணக்கிடைக்கிறது. இதன் முதல் சீசன் பொதுவாக நல்ல வரவேற்பினை பெற்றபொழுதும், ஸ்ரேஞ்சர் திங்ஸ் எனப்படும் மற்றொரு வலைத்தொடருடன் இது கொண்டிருந்த ஒற்றுமை காரணமாக ஒப்பிட்டுப் பேசப்பட்டது.
21 சூன் 2019 அன்று இதன் இரண்டாவது சீசன் நெட்ப்பிலிக்ஸ்-சில் வெளியிடப்பட்டு அதுவும் நல்ல வரவேற்பினை பெற்றது. டார்க் மூன்றாவது சீசனுடன் முற்றுப்பெரும் என நெட்ப்பிலிக்ஸ் அறிவித்துள்ளது.