உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
Dr. Bhimrao Ambedkar Law University
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
அறிவே அழிவில்லாதது
வகைபொது
உருவாக்கம்2019
வேந்தர்இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்
துணை வேந்தர்முனைவர் சுதி ராஜீவ்
அமைவிடம், ,
நிறங்கள்     நீலம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.alujaipur.ac.in

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (அசப ஜெய்ப்பூர்)(Dr. Bhimrao Ambedkar Law University) என்பது இந்திய மாநிலமான இராசத்தானின் தலைநகரான செய்ப்பூரில் உள்ள சட்டப் படிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குடியிருப்பு பல்கலைக்கழகமாகும். இது டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மசோதா, 2019 மூலம் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழக சட்டம் பிப்ரவரி 2019-ல் இராசத்தான் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 26 பிப்ரவரி 2019 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3][4] பிப்ரவரி 2020-ல், பல்கலைக்கழக மானியக் குழுவின் கூடுதல் செயலாளரும், இராசத்தான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான தேவ் ஸ்வரூப் இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[5] இந்திய அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியும், இந்திய அரசியலமைப்பின் சிற்பியுமான பீம்ராவ் அம்பேத்கர் நினைவாக இப்பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் இந்திய வழக்குரைஞர் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது..[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Act and Ordinance of ALU University". alujaipur.ac.in. 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.
  2. "The bill related to journalism and law university passed in the Rajasthan legislative assembly". navbharattimes.indiatimes.com (in ஆங்கிலம்). 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
  3. "Rajasthan Assembly passed Bill of law university" (PDF). rajassembly.nic.in (in ஆங்கிலம்). 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
  4. "Ashok Gehlot funds his poll promises". DNA India (in ஆங்கிலம்). 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
  5. "Swarup is new V-C of law univ | Jaipur News - Times of India".
  6. "BCI recognition for Bhimrao Ambedkar Law University". Times of India. Archived from the original on 6 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 August 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]