ஞானானந்த கிரி
ஞானானந்த கிரி | |
---|---|
பிறப்பு | அறியப்படவில்லை மங்களபுரி, கருநாடகா |
இறப்பு | சனவரி 10, 1974[1] திருக்கோவிலூர்,தமிழ்நாடு |
இயற்பெயர் | சுப்பிரமணியம் |
தத்துவம் | அத்வைத வேதாந்தம் |
குரு | சிவரத்ன கிரி, ஆதி சங்கரர் |
ஞானானந்தகிரி சுவாமிகள் (Swami Sri Gnanananda Giri) ஓர் அத்வைத வேதாந்தி. கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் உள்ள பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும்.[2]
இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுப்பிரமணியனைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்று. சுப்பிரமணியனுக்கு 39 வயதான போது சிவரத்னகிரி அவருக்கு ஞானானந்தகிரி எனும் பெயரைச் சூட்டித் தனக்குப்பின் பீடாதிபதியாகும் பொறுப்பை அளித்தார்.
பீடாதிபதி பொறுப்பேற்ற சில காலத்திலேயே ஞானானந்தகிரி வேறொருவரிடம் பீடாதிபதி பொறுப்பை ஒப்படைத்து விட்டு இமயமலைக்குத் தவமியற்றச் சென்று விட்டார். கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடன்றி திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்றார்.
திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம்[3] ஒன்றை ஏற்படுத்திய இவர் அங்கிருந்தபடி தன்னைப் பின்பற்றியோருக்கு வழிகாட்டினார். தபோவனத்தில் ஞானவிநாயகர், ஞானஸ்கந்தர், ஞானவேணுகோபாலர், நவக்கிரகங்கள் ஆகியோருக்குச் சிலைகள் நிறுவினார்.
நாமசங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் அவரது சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவமளிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhavan's Journal: Volume 20. India: The Andhra Chitrashala Printers and Publishers. 1974. p. 67.
- ↑ "தி ஹிந்து நாளிதழ் செய்தி". Sep 03, 2004. Archived from the original on 1 டிசம்பர் 2005. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
{{cite web}}
: Check date values in:|date=
and|archive-date=
(help) - ↑ "ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா". தினமலர் நாளிதழ். டிசம்பர் 27,201. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)