ஞானம் (இதழ்)
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
---|---|
வகை | இலக்கியம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
முதல் வெளியீடு | 2000 சூன் |
நாடு | இலங்கை |
ஞானம் (Gnanam) ஈழத்தில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாதாந்த இலக்கிய இதழ் ஆகும்.[1] இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஆவார்.[2] ஞானம் முதல் இதழ் 2000 ஜூனில் வெளியானது.[3] இதுவரை மாதம் தவறாமல் வெளிவருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பத்திகள் ஞானத்தில் வெளிவருகின்றன.[4]
ஞானம் 150ஆவது இதழ் ஈழப்போர் இலக்கியச் சிறப்பிதழாக 2012 நவம்பர் 25 இல் வெளியிடப்பட்டது[5]
தொடர்கள்
[தொகு]கே. விஜயனின் படித்ததும் கேட்டதும், மானா மக்கீனின் ஓசையில்லா ஓசைகள் ஆகிய பகுதிகள் ஞானம் சஞ்சிகையில் நீண்ட காலமாகத் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.[6]
மின்னூல்
[தொகு]ஒவ்வொரு மாதமும் ஞானம் சஞ்சிகையானது மின்னூல் வடிவிலும் ஞானத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினிலே வெளியிடப்படுகின்றது.[7] ஒரு சில இதழ்களை ஒருங்குறி வடிவிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. விரைவில் அனைத்து இதழ்களையும் ஒருங்குறி வடிவில் பெறலாம் என ஞானம் சஞ்சிகையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, சந்தாதாரர்களுக்கு ஞானம் மின்னூல் வடிவில் மின்னஞ்சலினூடாக அனுப்பி வைக்கப்படுகின்றது.[1]
கலந்துரையாடல் பக்கம்
[தொகு]ஞானம் சஞ்சிகை பற்றிய கலந்துரையாடல்களுக்காக ஓர் இணையத்தளம் ஒன்றையும் ஞானம் ஆசிரியர் ஆரம்பித்துள்ளார்.[8] இவ்விணையத்தளத்தின் மூலம் வாசகர்கள் ஞானம் ஆசிரியரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 மயூரா அகிலன் (நவம்பர் 25, 2011). "மின்னஞ்சலில் ஈழத்து சிற்றிதழ்கள்". ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "ஞானம்". ஜெயமோகன். அக்டோபர் 19, 2009. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "ஞானசேகரன், தி". விருபா. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "ஞானம் 2006.05". நூலகம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ ஈழத்துப் போர்க்காலச் சிறப்பிதழ் ஞானம் 150ஆவது இதழ் வெளியீடு பரணிடப்பட்டது 2012-12-03 at the வந்தவழி இயந்திரம், தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 25, 2012
- ↑ "ஞானம் 2011.06". நூலகம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ ["இதழ் இலக்கம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-04-01. இதழ் இலக்கம் (ஆங்கில மொழியில்)]
- ↑ "gnanam.info வலைப்பதிவு". Archived from the original on 2010-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-04-01.