ஜோர்ன் உட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்ன் அட்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்னி ஒப்பேரா மண்டபம்

ஜோர்ன் உட்சன் (Jørn Utzon, ஏப்ரல் 10, 1918 - நவம்பர் 29, 2008[1]), ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கப்பற் பொறியியலாளராவார். 1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைப்பதற்கான போட்டியில் முதற்பரிசு பெற்றார். இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.

இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார்;ஆனால், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட, நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம், உட்சனுக்கான கொடுப்பனவுகளைத் திடீரென நிறுத்தியது. 1966 இல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் விட்டுவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. எனினும் சிட்னி ஒப்பேரா மாளிகை, 1973ல் கட்டி முடிக்கப்பட்டது. இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.

மார்ச் 2003 இல், ஒப்பேரா மண்டபம் தொடர்பில் அட்சனின் வேலைகளுக்காக, சிட்னி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அட்சன், உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் அட்சனின் சார்பில் இந்த விருதை ஏற்றுக்கொண்டார்.

இவருடைய மற்றைய கட்டிடத் திட்டங்களில் பின்வருவனவும் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sydney Opera House designer Joern Utzon dies
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ன்_உட்சன்&oldid=1614733" இருந்து மீள்விக்கப்பட்டது