உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோர்ஜ் மெக்கோலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் மெக்கோலே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோர்ஜ் மெக்கோலே
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 211)சனவரி 1 1923 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசூலை 22 1933 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 8 468
ஓட்டங்கள் 112 6,055
மட்டையாட்ட சராசரி 18.66 18.07
100கள்/50கள் 0/1 3/21
அதியுயர் ஓட்டம் 76 125*
வீசிய பந்துகள் 1,701 89,877
வீழ்த்தல்கள் 24 1,837
பந்துவீச்சு சராசரி 27.58 17.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 126
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 31
சிறந்த பந்துவீச்சு 5/64 8/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 373/-
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 15 2010

ஜோர்ஜ் மெக்கோலே (George Macaulay , பிறப்பு: திசம்பர் 7 1897, இறப்பு: திசம்பர் 13 1940 ), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளாஇயாடி 112 ஓட்டங்களை எடுத்துளார். இதில் அதிகபட்சமாக 76 ஓட்டங்களை எடுத்தார். , 468 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1923 - 1933 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மெக்காலே டிசம்பர் 7, 1897 இல் திரஸ்கில் பிறந்தார். இவரது தந்தை ,இவரது மாமாக்களைப் போலவே நன்கு அறியப்பட்ட உள்ளூர் துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] மெக்காலே பர்னார்ட் கோட்டையில் கல்வி கற்றார்.பிற்காலத்ஹில் துடுப்பாட்ட அணியின் தலைவராக ஆனார்.[2] பள்ளியை விட்டு வெளியேறியதும், வேக்ஃபீல்டில் வங்கி எழுத்தராக பணியாற்றினார்; [3] அங்கே, அருகிலுள்ள ஒசெட்டில், இவர் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து விளையாடினார். [4] முதல் உலகப் போரில், மெக்காலே ராயல் ஃபீல்ட் பீரங்கியுடன் பணியாற்றினார்; [5] பின்னர் இவர் முன்பு இருந்த அதே வங்கியில் வேலைக்குத் திரும்பினார். துவக்க காலத்தில் லண்டனிலும், [3] பின்னர் கென்ட், ஹெர்ன் பேவில், தனது ஓய்வு நேரத்தில் துடுப்பாட்ட சங்கங்களில் விளையாடினார். [1] [4]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

மெக்காலே 1922–23ல் தென்னாப்பிரிக்காவில் எட்டு முதல் தர போட்டிகளில் விளையாடி, 16.37 எனும் சராசரியில் 29 இழப்புகளை வீழ்த்தினார். [6] இவர் பிரிட்டோரியாத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றியது மற்றும் டிரான்ஸ்வால் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் எட்டு இழப்புகள் எடுத்ததே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். அதே நேரத்தில் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் திறம்பட செயல்பட்டார், கிழக்கு ராண்டிற்கு எதிராக 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இழப்புகளையும், ஜூலூலாண் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 19 ஓட்டங்களுக்கு 6 இழப்புகளையும் எடுத்தார். [7] முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்த பின்னர், விஸ்டன் பந்துவீச்சில் பலவீனம் இருப்பதாகக் கூறிய பின்னர், மெக்காலே கிரென்வில் ஸ்டீவன்ஸுக்குப் பதிலாக இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்துக்காக தனது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை அறிமுகமானார். [8] [9] [10] இவர் தனது முதல் வீச்சில் ஜார்ஜ் அல்பிரட்டினை ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் அறிமுகப் போட்டியின் முதல் பந்தில் இழப்பினை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[11]முதல் ஆட்டப் பகுதியில் 19 ஓட்டங்களுக்கு இரண்டு இழப்புகளை எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில், தென்னாப்பிரிக்கா ஒரு இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் மெக்காலே 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 இழப்புகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் 64 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார்.[10] இந்த போட்டியில் இவர் மிக நேர்த்தியாக பந்து வீசினார் என்று விசுடனில் கருத்து தெரிவித்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. [10] [12] மீதமுள்ள மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர், 20.37 எனும் சராசரியில் 16 இழப்புகளை வீழ்த்தினார். [13] இங்கிலாந்து தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது.[14] தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக இவர் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார்.மேலும் இவரது சகிப்புத்தன்மை, சுழல் மற்றும் அனைத்து வகையான வீசுகளத்திலும் சிறப்பாக பந்து வீசும் திறனைப் பாராட்டியது.

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "Wisden – George Macaulay". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1924. பார்க்கப்பட்ட நாள் 27 February 2010.
 2. "Wisden – Obituaries during the war, 1940". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1941. பார்க்கப்பட்ட நாள் 27 February 2010.
 3. 3.0 3.1 "Former County Cricketer: Leeds Bankruptcy Court Examination". 13 January 1937. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000687/19370113/069/0003. பார்த்த நாள்: 30 September 2014.  (subscription required)
 4. 4.0 4.1 Woodhouse, p. 306.
 5. Hodgson, p. 109.
 6. "First-class Bowling in Each Season by George Macaulay". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 27 February 2010.
 7. "Player Oracle GG Macaulay". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 August 2010.
 8. "South Africa v England 1922–23". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1924. பார்க்கப்பட்ட நாள் 12 October 2010.
 9. "South Africa v England in 1922/23 (first Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 12 October 2010.
 10. 10.0 10.1 10.2 "South Africa v England in 1922/23 (second Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 12 October 2010.
 11. "Wicket with first ball in career". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.
 12. "South Africa v England 1922–23". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1924. பார்க்கப்பட்ட நாள் 28 February 2010.
 13. "Test Bowling in Each Season by George Macaulay". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 28 February 2010.
 14. "MCC team in South Africa 1922–23". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1924. பார்க்கப்பட்ட நாள் 5 August 2010.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_மெக்கோலே&oldid=3007082" இலிருந்து மீள்விக்கப்பட்டது