ஜோக்கோ விடோடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோக்கோ விடோடோ
ஜகார்த்தாவின் ஆளுநராக அலுவல்முறைப் படிமம் (2014)
இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவர்
தேர்வு
பதவியில்
20 அக்டோபர் 2014
Vice Presidentயூசஃப் கல்லா
Succeedingசுசீலோ பாம்பாங் யுதயோனோ
ஜகார்த்தாவின் 15வது ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 அக்டோபர் 2012
Deputyபாசுகி இத்யஹஜா புர்னமா
முன்னையவர்ஃபௌசி போவோ
பின்னவர்பாசுகி இத்யஹஜா புர்னமா
சுரகார்த்தா மேயர்
பதவியில்
28 சூலை 2005 – 1 அக்டோபர் 2012
Deputyஎஃப். எக்சு. ஹடி ருத்யாத்மோ
முன்னையவர்இசுலாமெட் சூர்யந்தோ
பின்னவர்எஃப். எக்சு. ஹடி ருத்யாத்மோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1961 (1961-06-21) (அகவை 62)
சுரகார்த்தா, இந்தோனேசியா
அரசியல் கட்சிஇந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி - போராட்டம்
துணைவர்இரியானா
பிள்ளைகள்கிப்ரான் ராகபுமிங்
கஹியாங் ஆயு
கேசங் பங்காரெப்
முன்னாள் கல்லூரிகஜா மடா பல்கலைக்கழகம்
சிறப்புப்பெயர்"ஜோக்கோவி"
கையெழுத்து

ஜோக்கோ விடோடோ (Joko Widodo, 21 சூன் 1961) இந்தோனேசிய அரசியல்வாதியும் தற்போதைய ஜகார்த்தா ஆளுநருமாவார். இவர் அடுத்த இந்தோனேசியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் பரவலாக ஜோக்கோவி என அழைக்கப்படுகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முன், ஜகார்தா மாகாண கவர்னராக இருந்தார்.

சூலை 22, 2014 அன்று ஜோக்கோவி 53.15% வாக்குகளைப் பெற்று எதிராகப் போட்டியிட்டு 46.85% வாக்குகளைப் பெற்ற பிரபோவோவைத் தோற்கடித்து இந்தோனேசியாவின் ஏழாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 20, 2014இல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார்.

2012 இல் ஜகார்த்தாவின் ஆளுநராக தேர்தலில் வென்றபிறகு இவரது புகழ் வளர்ந்து வந்தது. இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி - போராட்டம் [PDI-P] கட்சித் தலைவர் மேகவதி சுகர்னோபுத்ரி ஏப்ரல் 9 நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல்கள் முடிவுறும் வரை குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என கூறியிருந்தார். ஆனால் ஜோக்கோவிக்கு இருந்த பரவலான ஆதரவினால் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் எனக் கருதி தேர்தலுக்கு மூன்று வாரங்கள் முன்னரே, மார்ச்சு 14, 2014இல் இவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்தார்.[2]

மேற் சான்றுகள்[தொகு]

  1. "With the Election of Joko Widodo, Indonesia Writes a New Chapter". டைம். 22 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2014.
  2. 'Governor of Jakarta Receives His Party’s Nod for President', The New York Times, 14 March 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

1. Majeed, Rushda. "The City With a Short Fuse." பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் Foreign Policy. September 2012.
2. Majeed, Rushda. "Defusing a Volatile City, Igniting Reforms: Joko Widodo and Surakarta, Indonesia, 2005-2011." பரணிடப்பட்டது 2013-10-02 at the வந்தவழி இயந்திரம் Innovations for Successful Societies. Princeton University. Published July 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோக்கோ_விடோடோ&oldid=3890523" இலிருந்து மீள்விக்கப்பட்டது