ஜொன்னலகட்டா பத்மாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொன்னலகட்டா பத்மாவதி
சட்டமன்ற உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூன் 2019
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி
முன்னையவர்பி. யாமினிபாலா
தொகுதிசிங்கனமலை சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

ஜொன்னலகடா பத்மாவதி (Jonnalagadda Padmavathy) என்பவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சிங்கனமலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இளமை[தொகு]

பத்மாவதி ஜே. சென்னகேசவுலு மற்றும் ஜே. நிர்மலா தேவி ஆகியோருக்கு மகளாக 1979ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் பிறந்தார். இவர் முதுநிலை தொழில்நுட்பக் கல்வியினை ஜவகர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் (அனந்தபூர்) முடித்தார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2014ஆம் ஆண்டு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பத்மாவதி, 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சிங்கனமலைத் தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர் பி. யாமினிபாலாவிடம் 4,584 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் பத்மாவதி 2019 சட்டமன்றத் தேர்தலில் சிங்கனமலைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பண்டாரு சுரவாணி சிறீயை விட 46,242 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[3][4]

சாதனைகள்[தொகு]

கோவிட்-19 தொற்றின் போது மக்களுக்காகச் சேவை செய்யும் மருத்துவர்களின் உயிரைப் பாதுகாக்கும் ஓர் கண்டுபிடிப்பை உருவாக்கியதற்காகத் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த புதுமைப் போட்டியில் பத்மாவதி வடிவமைத்த வளிமண்டல அறைக்குச் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sakshi (2019). "Singanamala Constituency Winner List in AP Elections 2019" இம் மூலத்தில் இருந்து 10 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710093814/https://www.sakshi.com/election-2019/results/andhra_pradesh/constituency/singanamala. 
  2. The Hans India (1 November 2019). "Singanamala MLA Padmavathi's Husband gets a key post in the Andhra Pradesh govt" (in en). www.thehansindia.com இம் மூலத்தில் இருந்து 10 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710101829/https://www.thehansindia.com/andhra-pradesh/singanamala-mla-padmavathis-husband-gets-a-key-post-in-the-andhra-pradesh-govt-577408. பார்த்த நாள்: 10 July 2021. 
  3. Sakshi (25 May 2019). "ఇక్కడ ఎవరు గెలిస్తే ఆ పార్టీదే అధికారం" (in te). Sakshi இம் மூலத்தில் இருந்து 10 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710102121/https://m.sakshi.com/news/politics/jonnalagadda-padmavathi-win-singanamala-1192364. 
  4. Benjamin, Ravi P. (2019-03-24). "It's woman Vs woman in Singanamala". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
  5. Sakshi (18 July 2020). "ఎమ్మెల్యే పద్మావతి ఆవిష్కరణకు జాతీయ స్థాయి గుర్తింపు" (in te). Sakshi இம் மூலத்தில் இருந்து 10 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710103339/https://www.sakshi.com/news/andhra-pradesh/national-recognition-invention-mla-padmavati-1302245. 
  6. The Hindu (19 July 2020). "‘Atmospheric moveable cabin’ to replace PPEs in hospitals" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 6 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206181933/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/atmospheric-moveable-cabin-to-replace-ppes-in-hospitals/article32132817.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொன்னலகட்டா_பத்மாவதி&oldid=3922665" இலிருந்து மீள்விக்கப்பட்டது