ஜெ. தீபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெ. தீபா
Deepa.jpg
நிறுவனர், பொதுச் செயலாளர் - அஇஅதிமுக ஜெ.தீபா அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 பிப்ரவரி 2017
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 10, 1974 (1974-11-10) (அகவை 46)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அஇஅதிமுக - ஜெ.தீபா அணி
பெற்றோர் ஜெயக்குமார்
விஜயலட்சுமி
தொழில் அரசியல்வாதி, பத்திரிக்கையாளர்
சமயம் இந்து

ஜெ.தீபா (பிறப்பு:10 நவம்பர் 1974) அஇஅதிமுக ஜெ. தீபா அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார்.[1] இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளாவார்.[2] இவர் அஇஅதிமுக (ஜெ.தீபா) அணியின் தலைவி ஆவார்.

குடும்பம்[தொகு]

தீபா 1974, நவம்பர் 10 ஆம் நாளில் ஜெயக்குமார், விஜயலட்சுமி ஆகியோருக்கு பிறந்தார். ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஆவார்.[3] ஆதர்ஷ் வித்யாலயாவில் பன்னிரெண்டாம் வரை படித்தார். பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் வேலை செய்தார். 2010 இல் வேல்ஸ் நாட்டிலுள்ள பிரபல பல்கலைக்கழகமான கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் உலக இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[சான்று தேவை] அதன்பிறகு உலகச் செய்திகள், மனிதக் குற்றங்கள், பல்வேறு நாடுகளின் அரசியல் வரலாறு குறித்து படித்தார். தற்போது அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

தீபாவுக்கு தீபக் என்ற சகோதரர் (தம்பி) உள்ளார். தீபாவின் குடும்பம் பாட்டி சந்தியா இருந்தபோது ஜெயலலிதாவுடன் ஒன்றாக போயஸ் தோட்டத்தில் இருந்தார்கள். பாட்டி சந்தியா காலமான பின்னர் தீபாவின் தந்தை ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். பின்னர் தியாகாராய நகர் சிவஞ்சானம் தெருவில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தனர். தீபாவிற்கு மாதவன் என்னும் கணவர் உள்ளார். இவர்களுக்கு இருவீட்டர்கள் சம்மதத்துடனும், அத்தை ஜெயலலிதா சம்மதத்துடனும் 2012 நவம்பர் 11 ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. தீபாவின் தந்தை ஜெயக்குமாரும் தாய் விஜயலட்சுமியும் காலமாகிவிட்டனர்.

அரசியல்[தொகு]

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்[4] என்றும் மறைந்த தனது அத்தை ஜெயலலிதாவுக்கு தான்தான் உண்மையான வாரிசு என்றும் தீபா கூறினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2017 ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கினார். மேலும், அஇஅதிமுக - ஜெ.தீபா அணி என அதிமுகவின் அணியாக செயல்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை[தொகு]

இவர் பிப்ரவரி 24, 2017 அன்று "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை" என்ற பெயரில் புதிய இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். கருப்பு, சிவப்பு நிறங்கள் மற்றும் நடுவில் வெள்ளை நிறத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படம் உள்ள கொடியை இயக்க கொடியாக அறிமுகப்படுத்தப்பட்டது.[5][6] தற்போது இவர் அஇஅதிமுக (ஜெ.தீபா) எனும் அஇஅதிமுகவின் கிளை அணியை உருவாக்கியுள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._தீபா&oldid=2721304" இருந்து மீள்விக்கப்பட்டது