உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்பகவான் கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய்பகவான் கோயல் (Jaibhagwan Goyal) ஜே. பி. கோயல் என்றும் அழைக்கப்படும் ஜெய்பகவான் கோயல் ஓர் இந்திய இலக்கியவாதி, கல்வியாளர், பேராசிரியர் ஆவார். இவர் குர்முகி கையெழுத்துப் பிரதிகளில் 17 முதல் 19ஆம் நூற்றாண்டின் இந்தி இலக்கிய படைப்புகளைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். சீக்கிய இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கன. இவர் இந்தித் துறையில் முன்னாள் பேராசிரியராகப் பணியாற்றினார். அரியானாவில் உள்ள குருேசேத்திரா பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் மொழிகள் பீடத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[1]

30-இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய இவர், தேசிய மற்றும் பன்னாட்டுப் பத்திரிகைகளில் 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குருசேத்திரப் பல்கலைக்கழகத்தின் இந்தித் துறையின் முன்னாள் தலைவரும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தகைசால் பேராசிரியரும் ஆவார். குருச்சேத்திரப் பல்கலைக்கழக, பஞ்சாப் மொழித் துறை, அரியானா சாகித்ய அகாடமி, கிரந்த் அகாதமி, அரியானா உருது அகாதமி மற்றும் சண்டிகரின் குரு கோவிந்த் சிங் அறக்கட்டளை மற்றும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு போன்ற புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் இவரது பெரும்பாலான புத்தகங்களை வெளியிடப்பட்டன.[2] இலக்கியம் மற்றும் கல்விக்கு அவர் செய்த பங்களிப்புக்காக 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof. Jaibhagwan Goyal" (PDF).
  2. "JB Goyal conferred with Padma Shri for work in Sikh literature". Tribune India. 9 November 2021. https://www.tribuneindia.com/news/haryana/jb-goyal-conferred-with-padma-shri-for-work-in-sikh-literature-336083. 
  3. "Prof Jaibhagwan Goyal awarded Padma Shri for contribution in field of literature, education". ANI News. 9 November 2021. https://www.aninews.in/news/national/general-news/prof-jaibhagwan-goyal-awarded-padma-shri-for-contribution-in-field-of-literature-education20211109121401/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்பகவான்_கோயல்&oldid=3972425" இலிருந்து மீள்விக்கப்பட்டது