ஜெயசிறீ சட்டோபாத்யாய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயசிறீரீ சட்டோபாத்யாய (Jayasri Chattopadhyay)(பி. 1945) என்பவர் இந்தியாவின் மேற்கு வங்கம், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு சமசுகிருத எழுத்தாளர் மற்றும் சமசுகிருத கவிஞர் ஆவார். இவரது முனைவர் பட்ட ஆய்வு 'வால்மீகியின் இராமாயணத்தின் பாடல் வரிகள்' என்பதாகும். இவர் தனது இலக்கிய முனைவர் பட்டத்திற்கு 'விசுவகாபி இரவீந்திரநாத் தாகூரின் இலக்கியத்தில் புத்த அவதான இலக்கியத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டார்.

ஜெயசிறீ இயற்றிய சமசுகிருத கவிதைகளின் தொகுப்பு நிஸ்ஸங்கஹ் ப்ரணய்ஹ் ஆகும். இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு லவ் வித் அட்டாச்மென்ட் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.[1] சூன் 2015, பேங்காக்கில் நடைபெற்ற 16வது உலக சமசுகிருத மாநாட்டில் வெளியிடப்பட்ட நிஸ்ஸங்கஹ் பிராணயா பற்றிய குறுந்தகடு இவர் தயார் செய்தது ஆகும். இவரது குறிப்பிடத்தக்க சமசுகிருத பங்களிப்புகள் 'அஸப்விலாச சமிக்ஷா', 'சமசுகிருத சாகித்யே சுவப்னா', 'மகாவஸ்துனி ராமாயணநுபவ', 'அத்யர்தசதக சமிக்ஷா', 'மிருச்சகதிகே வர்ஷா', 'புத்தசரிதே ராமாயண சம்யம்', 'ஜகந்நாதஸ்ய', 'ஜகதாபரணம்', 'சகதாபரணம்,' 'உஷா வரவர்ணினி' மற்றும் 'தேவி சூக்தம்' ஆகும். இவை பல்வேறு சமசுகிருத இதழ்களில் வெளிவந்தன.

பஞ்சதந்திரத்தின் இரண்டு தந்திரங்களான 'ககோலுகியம்' மற்றும் 'லப்தபிரனாசம்' ஆகியவற்றை வங்காள மொழியிலும் இவர் திருத்தி மொழிபெயர்த்தார். நிஸ்ஸங்க பிரணயாவைத் தவிர, 'ராத்ரி', 'ஷிலாபட்டாரிகா', 'அவசர' மற்றும் 'காலிகாடநகரிய துர்காபிரதிமாங் பிரதி' போன்ற சமசுகிருத கவிதைகளையும் இயற்றியுள்ளார். இதன் ஆங்கில மொழியாக்கத்தை இவர் செப்டம்பர் 2015 அன்று திப்ருகாரில் நடைபெற்ற சாகித்ய அகாதமியின் அபிவ்யக்தி நிகழ்ச்சியில் வழங்கினார்.

கொல்கத்தாவில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த இவர், ஆயர் கல்லூரியில் இறையியல் முதுகலை ஆசிரியராகவும் இருந்தார்.

கொல்கத்தாவில் உள்ள சமசுகிருத கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் இருந்தார், ஜெயசிறீ. இவர் மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழக சாசுதிர சுராமணி உதவித்தொகையைப் பெற்றார். சீதாராம் பைடிக் ஆதர்ஷ சமசுகிருத மகாபித்யாலேயில் கற்பித்தார்.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அலங்கார சாசுதிரம் (கவிதைகள்) கற்பித்தார். சமசுகிருத புசுதக் பண்டரால் வெளியிடப்பட்ட வங்காள மொழியில் சமசுகிருத கவிதைகளின் வரலாற்றை எழுதினார்.

சமீபத்தில் இவரது பயண அனுபவங்கள் பெங்காலி புத்தகமான பிரமன் விலாசிர் நாட்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தகங்கள்[தொகு]

  • வால்மீகியே ராமாயணே கிதிகாவ்யதர்மிதா
  • நிஸ்ஸங்கஹ் ப்ராணாயஹ்
  • வால்மீகியம் ராமாயணம்
  • அவதன் ஏவம் ரவீந்திரநாத்
  • புத்த சரிதம்
  • அலம்காரஸாஹித்யேர் ஸம்ரித இதிஹாஷ்
  • த்வண்யலோகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Caṭṭopādhyāya, Jayaśrī (1999). Niḥsaṅgaḥ Praṇayaḥ. Sanskrit Pustak Bhandar. https://www.google.com/books/edition/Love_Without_Attachment_a_Collection_of/_hd1AAAAIAAJ?hl=en&gbpv=0. பார்த்த நாள்: 23 June 2021. 

குறிப்புகள்[தொகு]

  • "All India Oriental Conference Life Members list". All India Oriental Conference. Archived from the original (DOC) on 2016-03-04.
  • Vimsa-Satabdi-Samskrita-Kavyamritam by Aviraj Rajendra Mishra
  • Sanskrit Journal Ajasra
  • Sanskrit Journal Samgamani
  • Sanskrita Pratibha, Sahitya Academy
  • Indian Literature, Sahitya Academy
  • All India Oriental Conference Proceedings B.O.R.I.
  • Kolkatar Kadcha in Anandabazar Patrika newspaper dated 8 March 1993
  • Pardte Pardte in Anadabazar Patrika newspaper dated 27 June 1998
  • Boier Desh Magazine April–June Issue 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசிறீ_சட்டோபாத்யாய&oldid=3673466" இலிருந்து மீள்விக்கப்பட்டது