ஜெசிமா இஸ்மாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெசிமா இஸ்மாயில்
பிறப்பு1935
சாய்ந்தமருது, கல்முனை, அம்பாறை
தேசியம்இலங்கையர்
கல்விபுனித் பிரிட்ஜெட் கல்லூரி, கொழும்பு
படித்த கல்வி நிறுவனங்கள்பேராதனை பல்கலைக்கழகம்
கொழும்பு பல்கலைக்கழகம்
பணிசமூக ஆர்வலர், ஒலிபரப்பாளர், கல்வியாளர்
வாழ்க்கைத்
துணை
மஹ்ரூப் இஸ்மாயில்
விருதுகள்தேசபந்து (1989)

தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் (பிறப்பு 1935) இலங்கையை சேர்ந்த கல்வியாளர், ஒலிபரப்பாளர் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மனித உரிமை வழக்கறிஞராக சேவையாற்றியுள்ளார்[1][2]. கல்வி, மனித உரிமை, ஒலிபரப்பு ஆகிய துறைகளில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்[3]. முஸ்லிம் மகளிர் ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கை மன்றம் எனும் அமைப்பின் நிறுவனரும், இலங்கை முஸ்லிம் பெண்கள் மாநாட்டின் தலைவரும் ஆவார்[4]. இவர் நாட்டின் முக்கிய பிரச்சினைகள், இளைஞர் எழுச்சி, பெண் உரிமைகள், சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியவைகளை பற்றி உரையாற்றியுள்ளமை குறிப்பிடதக்கது[5]. 1989 ஆம் ஆண்டு இலங்கையின் மூன்றாவது உயரிய கௌரவமான  தேசபந்து விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்[6][7]. ஜெசிமா இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிறந்த முன்மாதிரி பெண்ணாகத் திகழ்கின்றார்[8].

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஜெசிமா இஸ்மாயில் 1935 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டரை மைல் தொலைவில் அமைந்துள்ள சாய்ந்தமருது என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை நீர்ப்பாசான பொறியியளாரும் ,தாய் இல்லத்தரசியுமாவார். இவரது பாட்டனார் பள்ளிவாயில் அறங்காவலராகப் பணியாற்றியுள்ளார்.

ஜெசிமா பழமைவாத குடும்பப் பின்னணியை கொண்டவர். ஆனால் அவரது தந்தை அவருக்கு கல்வியை தொடர ஊக்கமளித்தார். கொழும்பில் புனித பிரிட்ஜெட் கன்னிமாடத்தில் இல் கல்வி கற்றார்.

ஜெசிமாவின் தாய்வழி குடும்பத்தின் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டிருந்தனர். அவரின் தாய் தேர்தல் காலங்களில் வாக்குபதிவு முகவராக பணியாற்றியுள்ளார்[9].

ஜெசிமா பேராதனை பல்கலைக்கழகத்திலும், சிலோன் பல்கலைகழகத்திலும் 1955 ஆம் ஆண்டு தனது 20வது வயதில் பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

சிலோன் பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு பட்டம் பெற்றபின் கல்வி, மனித உரிமை, ஒலிபரப்பு ஆகிய துறைகளில் பணிபுரிந்தார். தேவி மகளிர் வித்தியாலயத்தில் அதிபர் கலாநிதி. விமலா டி சில்வா அவர்களின் வழிகாட்டலில் கடமையாற்றினார். பின்பு கனடா சென்று மெக்கில் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலை டிப்ளோமாவை அவுஸ்ரேலியா சிட்னி பல்கலைகழகத்தில் பூர்த்தி செய்தார்

ஜெசிமா 32 வருட காலமாக கல்வி கற்பித்தலில் ஈடுபட்டிருக்கிறார். முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் அதிபராக 1975 - 1988 வரை சுமார் 13 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்[10].

1980ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் குண்டு வெடிப்புகள் தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்[11].

இலங்கை முஸ்லிம் பெண்கள் மாநாட்டின் நிறுவனர் ஆவார். மேலும் இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக சேவையாற்றியுள்ளார்.

இலவசமான மற்றும் நேர்மையான தேர்தல்களுக்கு மக்கள் நடவடிக்கைகள் எனும் அமைப்பின் தலைவரும் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜெசிமா இஸ்மாயில் பேராசிரியர் மஹ்ரூப் இஸ்மாயிலை திருமணம் முடித்தார். பேராசிரியர் மஹ்ருப் இஸ்மாயில் 13 சூன் 2016 இல் தனது 85ம் வயதில் காலமானார்[7].

மேற்கோள்கள்[தொகு]

 1. http://archives.sundayobserver.lk/2016/09/04/spe-wom-01.asp
 2. https://www.colombotelegraph.com/index.php/a-tribute-to-the-cordial-relations-between-muslims-and-sinhalese-in-the-past/
 3. http://www.sundaytimes.lk/101107/Plus/plus_20.html
 4. https://www.themuslim500.com/profiles/jezima-ismail/
 5. http://hrcsl.lk/english/about-us/members-of-the-commission/
 6. https://www.highbeam.com/doc/1P3-2395165631.html
 7. 7.0 7.1 http://themuslim500.com/profile/jezima-ismail
 8. https://www.pressreader.com/sri-lanka/daily-mirror-sri-lanka/20120308/287367673516141
 9. http://womenclaimingrights.womenandmedia.org/?p=168
 10. http://gptd-srilanka.blogspot.com/2009/03/deshabandhu-jezima-ismail.html
 11. https://web.archive.org/web/20091231083824/http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200912/20091228alston_letter_reffered_to_special_committee.htm#
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிமா_இஸ்மாயில்&oldid=2737810" இருந்து மீள்விக்கப்பட்டது