தேசபந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசபந்து (Deshabandu) என்பது, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் சிறீ லங்காபிமான்ய, தேசமான்ய என்பவற்றுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.[1] வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் தேசபந்து என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர் (எ.கா: தேசபந்து சிவா சின்னத்தம்பி).

தேசபந்து என்ற சமசுகிருத சொல்லிற்கு நாட்டின் நண்பன் என்று பொருள். பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்திற்காக போராடிய தலைவர்களை பொதுமக்கள் தேசபந்து என்ற அடைமொழியுடன் அழைப்பர். எடுத்துக்காட்டு: சித்தரஞ்சன் தாஸ்[2]

விருது பெற்றோர்[தொகு]

இலங்கையில் 1986ல் இருந்து விருது பெற்றவர்களின் விபரங்களைக் கீழே காணலாம்.

1986[தொகு]

 • அகங்கமகே டியூடர் ஆரியரத்ன
 • ஹேவா கொமனகே தர்மதாச
 • நொரேந்திரதாஸ் ஜயரத்தினம் வாலுப்பிள்ளை
 • டாப்னே ஆட்டிகல
 • விமலா டி சில்வா
 • அருளானந்தம் யேசுஅடியான் சாமுவேல் ஞானம்
 • டேவிட் எட்வின் ஹெட்டியாராச்சி
 • தமித்தல் சேனகுமார் ஜயசுந்தர
 • கிளாரா மோத்வானி

1987[தொகு]

 • புலத்சிங்கலகே சிரிசேன கூரே
 • ஜேம்ஸ் ஏர்னெஸ்ட் இவான் கொரியா
 • அல்பேர்ட் எதிரிசிங்க
 • டொன் ஜினதாச ஆட்டிகல
 • சிவா சின்னத்தம்பி
 • லேனா சார்லட் பெர்னாண்டோ
 • மொகமத் தாசிம் அகமத் புர்க்கான்
 • சத்திஸ்சந்திர ஜயசிங்க
 • அபேசிரி மென்டிஸ் முனசிங்க
 • அப்துல் ஹலீம் செரீஃப்தீன்
 • பிரான்சிஸ்கூஹெட்டிகே ஜெரால்ட் ஹட்சன் சில்வா
 • சாமுவேல் ஜெயராஜா ஸ்டீபன்
 • விக்டர் கார்வின் வீரவர்தன ரத்நாயக்க
 • மைக்கேல் திசேரா
 • விக்கிரமசிங்க விமலதாச

1988[தொகு]

 • வேலு அண்ணாமலை
 • மொகமத் மொகிதீன் மொகமத் அப்துல்காதர்
 • நுவரபக்ச ஹேவாயலகே கீர்த்திரத்ன
 • செம்புக்குட்டியாராச்சிகே பேர்ட்ரம் சில்வா
 • மாணிக்கம் சிவானந்தன்
 • ஜோன் வில்லியம் சுபசிங்க
 • நொயெல் விமலசேன
 • சுவர்ணா பெர்டினன்ட்
 • அலெக் ரொபேர்ட்சன்
 • மிரிஸ்செ ஹேவகே குணதாச சிரிவர்தன
 • ஜூலியன் பொல்லிங்
 • கொஸ்கமகே திலக தம்மிக்க ஜினதாச

1989[தொகு]

 • பாலித எட்வேர்ட் டயஸ் விஜேசிரி ஜயவர்தன கருணாரத்ன வீரமன்
 • போகொட அப்புகாமிலாகே பிரேமரத்ன
 • கலிஸ்டஸ் ரெஜினோல்ட் சீமன்
 • சீதா செனவிரத்ன
 • டொன் பியதாச ஜயசிங்க
 • கார்டி புஞ்சி ஹேவகே கருணாரத்ன
 • ஜெசிமா இஸ்மாயில்
 • ஜோய்ஸ் செலினா அபேவர்தன குணசேகர
 • எடித் மார்குவெரைட் கிரேஸ் பெர்னாண்டோ

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசபந்து&oldid=2466317" இருந்து மீள்விக்கப்பட்டது