ஜூலியன் அசாஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலியன் அசான்ச் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜூலியன் அசாஞ்சு
Julian Assange
Julian Assange (Norway, March 2010).jpg
2010 இல் அசாஞ்சு
பிறப்பு 1971 (அகவை 46–47)[1][2]
டவுன்ஸ்வில், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
பணி விக்கிலீக்ஸ் ஆசிரியர், பேச்சாளர்.
பிள்ளைகள் டானியெல் அசாஞ்சு[3]
விருதுகள் Economist Index of Censorship Award (2008), பன்னாட்டு மன்னிப்பு அவையின் (ஐஇ) ஊடக விருது (2009), சாம் ஆடம்ஸ் விருது (2010)

ஜூலியன் பவுல் அசாஞ்சு (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும்[4], வெளியீட்டாளரும்[5] ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.

அசாஞ்சு 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.

அசாஞ்சு பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசாஞ்சு, இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் 2010 டிசம்பர் 7ஆம் திகதி இவர் இலண்டனில் போலீசாரிடம் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்[6]. டிசம்பர் 14 ,2010 அன்று இவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாள் கழித்தே 16 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Julian Assange's mother recalls Magnetic". Australia: Magnetic Times (7 August 2010).
  2. Khatchadourian, Raffi (7 June 2010). "No Secrets". The New Yorker.
  3. Daniel Assange: I never thought WikiLeaks would succeed, Nick Johns-Wickberg, 17 September 2010, Crikey
  4. http://www.spectator.co.uk/alexmassie/6437594/yes-julian-assange-is-a-journalist.thtml
  5. http://www.time.com/time/world/article/0,8599,2006789,00.html?xid=huffpo-direct
  6. "Wikileaks founder Julian Assange arrested in London". BBC. 7 December 2010. http://www.bbc.co.uk/news/uk-11937110. பார்த்த நாள்: 7 December 2010. 
  7. http://www.reuters.com/article/idUSL3E6N80HH20101217 விக்கிலீக்சு அசாஞ்சு பிணையில் விடுதலை -ருயூட்டர்சு
  8. http://www.bbc.co.uk/news/uk-12005930 விக்கிலீக்சு அதிபர் பிணையில் விடுதலை -பிபிசி
Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியன்_அசாஞ்சு&oldid=2243791" இருந்து மீள்விக்கப்பட்டது