ஜும்ப்பா லாஹிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜும்ப்பா லாஹிரி

ஜும்ப்பா லாஹிரி (வங்காள மொழி: ঝুম্পা লাহিড়ী) (பிறப்பு நீலஞ்சனா சுதேஷ்னா, 1967) ஒரு இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இலண்டனில் பிறந்து ரோட் தீவில் வளர்ந்த லாஹிரியின் முதலாம் நூல், ஒரு சிறுகதைத் தொகுப்பு "இண்டர்ப்பிரெட்டர் ஆஃப் மேலடீஸ்" (Interpreter Of Maladies), 2000ல் புலிட்சர் பரிசை வெற்றிபெற்றது. இவரின் இரண்டாம் நூல், முதலாம் நாவல் "த நேம்சேக்" (The Namesake) 2003ல் வெளிவந்து 2007ல் இயக்குனர் மீரா நாயர் திரைப்படமாகப் படைத்தார்.

பிறப்பு[தொகு]

ஜும்பா லாகிரியின் பெற்றோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முதலில் பிரிட்டனில் குடியேறினார்கள். ஜும்பா லாகிரி பிரிட்டனில் பிறந்தார். அவருக்கு இரண்டு வயது ஆனபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடியேறினர்.

விருது[தொகு]

2014 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் தேசிய மனித நேய விருதை ஜும்பா லாகிரிக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா வழங்கிக் கவுரவித்தார்.

உசாத்துணை[தொகு]

தி இந்து (தமிழ்) 12, செப்தம்பர், 2015.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜும்ப்பா_லாஹிரி&oldid=3397251" இலிருந்து மீள்விக்கப்பட்டது