உள்ளடக்கத்துக்குச் செல்

ஜும்பா லஹிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜும்பா லஹிரி
பிறப்புநிலஞ்சனா சுதேசனா லஹிரி
சூலை 11, 1967 (1967-07-11) (அகவை 57)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தொழில்எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
கல்வி நிலையம்
  • பர்னாட் கல்லூரி,
    கொலம்பியா பல்கலைக்கழகம்
  • பாசுடன் பல்கலைக்கழகம்
வகைபுதினம், சிறுகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • இன்டர்ப்ரீட்ர் ஒப் மலேடிஸ் (1999)
  • த நேம்சேக் (புதினம்) (2003)
  • த லோலேன்ட் (2013)
குறிப்பிடத்தக்க விருதுகள்
இணையதளம்
www.randomhouse.com/kvpa/jhumpalahiri/

ஜும்பா லஹிரி (Jhumpa Lahiri) என்கிற நிலஞ்சனா சுதேஷ்ன ஜும்பா லஹிரி (பிறப்பு: ஜுலை 11,1967) ஆங்கிலத்தில் சிறுகதைகள், புதினங்கள் கட்டுரைகளுக்காக அறியப்பட்ட ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். சமீபத்தில், இத்தாலிய மொழிலும் இவர் எழுதி வருகிறார். சிறுகதை புலமைக்கான 29வது மலமுது விருதினைப்பெற்றுள்ளார். “இண்டெர்ப்ரெட்டர் ஆஃப் மாலடிஸ்” (1999) என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பிற்கு 2000ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. ”தி நேம்சேக்” என்ற முதல் கதை(2003) திரைப்படமாக்கப்பட்டது. இவரது ”தி லோலண்ட்” என்ற புத்தகம் மிக உயரிய விருதான புக்கர் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டது. லஹிரி தற்பொழுது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

லஹிரி மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து குடியேறிய இந்தியர்களின் மகளாவார். இவர் இலண்டனில் பிறந்தார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது குடும்பம் அமெரிக்காவுக்குச் குடியேறியது. லஹிரி ரோட் தீவின் கிங்ஸ்டனில் வளர்ந்தார். இவரது தந்தை அமர் ரோட் தீவின் பல்கலைக்கழகத்தில் நூலகராக பணிபுரிகிறார்.[1] லஹிரியின் தாயார் தனது குழந்தைகள் வங்காள பாரம்பரியத்தை அறிந்து வளர வேண்டும் என விரும்பியதால் கொகல்கத்தாவில் உள்ள உறவினர்களை அடிக்கடி சந்தித்தனர்.[2] லஹிரி தென் கிங்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பர்னாட் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3] பின்னர் பாஸ்டன் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், படைப்பு எழுத்தில் எம்.எஃப்.ஏ, ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் மற்றும் மறுமலர்ச்சி ஆய்வுகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். லஹிரி பாஸ்டன் பல்கலைக்கழகத்திலும், ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஒப் டிசைனில் படைப்பு எழுத்தை கற்பித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பீடத்தில் லூயிஸ் சென்டர் ஃபார் ஆர்ட்ஸில் படைப்பு எழுத்தில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.[4]

இலக்கியப் பணி

[தொகு]

ஜும்பா லஹிரி 1999 ஆம் ஆண்டில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான இன்ட்ரெப்டர் ஆப் மாலடீஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் புலிற்சர் பரிசை வென்றது. மேலும் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இவரது முதல் புதினமாகிய தி நேம்சேக் தழுவி பிரபலமான திரைப்படமொன்று எடுக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அன்கொம்ஸ்டுமெட் எர்த் என்ற இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு பிராங் ஓ கானர் பன்னாட்டு சிறுகதை விருதை வென்றது. மேலும் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது இரண்டாவது புதினமான த லோலேண்ட் மேன் புக்கர் பரிசு மற்றும் புனைக்கதைக்கான தேசிய விருதின் இறுதி போட்டிக்கு தெரிவானது. லஹிரி 2011 ஆம் ஆண்டில் இத்தாலியின் உரோம் நகரத்திற்கு சென்றார். அதன் பின்னர் இரண்டு கட்டுரைகளின் புத்தகங்களை இத்தாலிய மொழியில் வெளியிட்டுள்ளார். இவர் மேலும் இத்தாலிய மொழியில் சொந்த படைப்புக்களையும் இத்தாலிய மொழியிலிருந்து பிற ஆசிரியர்களின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[5][6] 2014 ஆம் ஆண்டில் லஹிரிக்கு தேசிய மனிதநேய பதக்கம் வழங்கப்பட்டது. தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் பேராசியராக பணியாற்றுகிறார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

லஹிரி 2001 ஆம் ஆண்டில் ஆல்பர்டோ வொவர்லியாஸ்-புஷ் என்ற பத்திரிகையாளரை மணம் புரிந்தார். புஷ் அப்போது டைம் என்ற லத்தீன் அமெரிக்கா பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்தார். இப்போது டைம் லத்தீன் அமெரிக்காவின் மூத்த ஆசிரியராக பணிபுரிகிறார்.[7] லஹிரி தனது கணவர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான ஆக்டேவியோ (பிறப்பு 2002) மற்றும் நூர் (பிறப்பு 2005) ஆகியோருடன் ரோமில் வசிக்கிறார்.[8]

குறிப்பிடத்தக்க விருதுகள்

[தொகு]
  • 2000 - புலிட்சர் பரிசு
  • 2008 - ஆசிய அமெரிக்க இலக்கிய விருது
  • 2014 - தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எஸ்.சி பரிசு
  • 2014 - தேசிய மனித நேய பதக்கம்
  • 2017 - மலமுது விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pulitzer winner Lahiri, a novel approach". usatoday30.usatoday.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "'Interview with Jhumpa Lahiri' interviewed by Arun Aguiar". Pif Magazine. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  3. "Pulitzer Prize awarded to Barnard alumna Jhumpa Lahiri '89; Katherine Boo '88 cited in public service award to The Washington Post". Archived from the original on 2004-02-24.
  4. "News | Office of the Dean for Research". research.princeton.edu. Archived from the original on 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  5. "Jhumpa Lahiri". National Endowment for the Humanities (NEH) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  6. 6.0 6.1 "Jhumpa Lahiri". Lewis Center for the Arts (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  7. "A Writer's Room". www.nytimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  8. "Books: Inspiring Adaptation". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jhumpa Lahiri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வெளி ஒலியூடகங்கள்
Writer Jhumpa Lahiri, Fresh Air, September 4, 2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜும்பா_லஹிரி&oldid=3722326" இலிருந்து மீள்விக்கப்பட்டது