உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீதன் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீதன் சஷி படேல் (Jeetan Shashi Patel குசராத்தி: જીતેન પટેલ  ; பிறப்பு 7 மே 1980) ஒரு முன்னாள் நியூசிலாந்து சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஆவார். எதிர் சுழல்வலதுகை பந்து வீச்சாளரான அவர் இங்கிலாந்தில் உள்ள வார்விக்சயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக துடுப்பாட்டம் விளையாடுகிறார், மேலும் நியூசிலாந்தில் வெலிங்டன் ஃபயர்பர்ட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

2005 முதல் 2013 வரை, படேல் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நியூசிலாந்துக்காக விளையாடினார், ஆனால் 2014 இல் அவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளுக்குப் பதிலாக கவுண்டி துடுப்பாட்டப் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இங்கிலாந்தின் தொழில்முறை துடுப்பாட்ட வீரர்கள் சங்கத்தால் அவர் இரண்டு முறை மிகவும் மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார், மேலும் 2015 ஆம் ஆண்டில் விஸ்டன் அவரை இந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறிவித்தது.[1]

இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தின் போது காயமடைந்த மார்க் கிரேக்கிற்கு பதிலாக 2016 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் தேசிய அணிக்கு சேக்கப்பட்டார். அங்கு அவர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். அவர் 21 ஜூன் 2017 அன்று சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜீதன் படேல் வெலிங்டனில் வளர்க்கப்பட்டார் மற்றும் குஜராத்தின் நவ்சரியில் இவர்களீன் முன்னோர்கள் இருந்தனர்.[2]

துடுப்பாட்ட ஆரம்ப கால வாழ்க்கையில்[தொகு]

படேல் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக கருதப்பட்டார். அவர் வெலிங்டனில் 15 வயதுக்குட்பட்டவர், 17 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி மற்றும் 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்ட அணி ஆகிய துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். அவர் 1999 இல் இங்கிலாந்து அ அணிக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டப் போட்டியில் இவர் - க்கு நியூசிலாந்து துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெலிங்டனுக்காக ஐந்து இழப்புகள் எடுத்தார். ஆனால் இந்த அணி ஆக்லாந்து துடுப்பாட்ட அணியிடம் தோல்வி அடைந்தது.[3]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

2004 ஆம் ஆண்டில் , அவர் பக்கிங்ஹாம் டவுன் துடுப்பாட்ட சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த அணி 1வது அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் உள்ளூர் அபிவிருத்தி திட்டங்களில் வருங்கால இளைஞர்களையும் உருவாக்கியது. போர்டல் ரோட் சங்கத்திற்காக விளையாடிய போது இவர் 50 இழப்புகளைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்தில், படேல் 2004-05 ஆம் ஆண்டில் பந்துவீச்சாளராக சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். 32.84 எனும் சராசரியில் 26 முதல் தரத் துடுப்பாட்ட இழப்புகளை வீழ்த்தினார். 2004-05 நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா அ அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா அ-க்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், 2004-05 ஸ்டேட் ஆஃப் ஆரிஜின் போட்டியில் வட தீவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் 2005 கிரிக்கெட் ஆஸ்திரேலியா எமெர்ஜிங் நியூசிலாந்து அகாதமிக்காக விளையாடினார்

பின்னர் அதே ஆண்டில் அவர் நியூசிலாந்து அ உடன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அங்ன்கு முத் தரப்பு ஒரு நாள் போட்டியில் இவர் விளையாடினார்.

ஜூன் 2018 இல், வெலிங்டனுடன் 2018–19 பருவத்திற்கான ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது.[4] அவர் 2018–19 சூப்பர் ஸ்மாஷில் வெலிங்டனுக்காகஒன்பது போட்டிகளில் பதினொரு ஆட்டமிழப்புகளை எடுத்தார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Jeetan Patel named in Wisden Almanack's top five cricketers of the year". stuff.co.nz. 9 April 2015. http://www.stuff.co.nz/sport/cricket/67661905/jeetan-patel-named-in-wisden-almanacks-top-five-cricketers-of-the-year. பார்த்த நாள்: 8 April 2015. 
  2. "It's another 'homecoming' for New Zealand player with Navsari roots". DNA India. 2 November 2010. http://www.dnaindia.com/sports/report-it-s-another-homecoming-for-new-zealand-player-with-navsari-roots-1460948. 
  3. "Scorecard: Auckland v Wellington, 12–15 Feb 2000". Auckland Cricket. Archived from the original on 15 April 2015. பார்க்கப்பட்ட நாள் 10 April 2015.
  4. "Central Districts drop Jesse Ryder from contracts list". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
  5. "Super Smash, 2018/19 - Wellington: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீதன்_படேல்&oldid=3968869" இலிருந்து மீள்விக்கப்பட்டது