ஜி. எஸ். பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. எஸ். பாலி
இமாச்சலப் பிரதேச அரசின் அமைச்சர்
தொகுதிநக்ரோட்டா
பதவியில்
2012–2017
முன்னையவர்கிஷன் கபூர்
பின்னவர்கிஷன் கபூர்
பதவியில்
2003–2007
பின்னவர்கிஷன் கபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூலை 1954 (1954-07-27) (அகவை 69)
காங்ரா, காங்ரா மாவட்டம், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
பிள்ளைகள்இரகுவீர் பாலி
வாழிடம்(s)காங்ரா, இமாச்சலப் பிரதேசம்
வேலைஅரசியல்வாதி
தொழில்அரசியல்

குர்முக் சிங் பாலி (Gurmukh Singh Bali) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா பக்வானைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் காங்ராவில் பிறந்தார். இவர்இயந்திரப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்தவர் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேச அமைச்சரவையில் போக்குவரத்து, உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தார்.

இவர் ஹிமாச்சல் நக்ரிக் சுதர் சபாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் ஹிமாச்சல் சமூக அமைப்பு கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் பின்னர் தலைவராகவும் இருந்தார். இவர் 1990 முதல் 1997 வரை இந்திய தேசிய காங்கிரஸ் விசார் மஞ்சின் செய்தித் தொடர்பாளராகவும், 1995 முதல் 1998 வரை காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவராகவும், 1993 முதல் 1998 வரை இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராகவும் இருந்தார்.

இவர் 1998 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2003, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2003 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட அருண்குமார் என்பவரிடம் தோற்றார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Official Profile of G.S. Bali @ hpvidhansabha.nic.in பரணிடப்பட்டது 9 சூலை 2006 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எஸ்._பாலி&oldid=3627677" இலிருந்து மீள்விக்கப்பட்டது