உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிம் மோரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம் மோரிசன்
Performing with The Doors
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜேம்ஸ் டக்ளஸ் மோரிசன்
பிறப்பு(1943-12-08)திசம்பர் 8, 1943
மெல்போர்ன், புளோரிடா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
இறப்புசூலை 3, 1971(1971-07-03) (அகவை 27)
பாரிசு, பிரான்சு
இசை வடிவங்கள்சைக்கேடெலிக் ராக், ஆசிட் ராக், புளுஸ் ராக், ஹார்ட் ராக்
தொழில்(கள்)இசைக் கலைஞர், பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர்
இசைத்துறையில்1963—1971
வெளியீட்டு நிறுவனங்கள்எலக்ட்ரா, கொலம்பியா ரெகார்ட்ஸ்
இணைந்த செயற்பாடுகள்தி டோர்ஸ், ரிக் & தி ராவென்ஸ்
இணையதளம்http://www.thedoors.com/

ஜேம்ஸ் டக்ளஸ் மோரிசன் (James Douglas Morrison) (திசம்பர் 8,1943 - சூலை 3,1971) என்பவர் ஒரு அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் தி டோர்ஸ் என்ற ராக் இசைக்குழுவின் முன்னணிப் பாடகராகவும் முதன்மைப் பாடலாசிரியராகவும் இருந்தார். இவரது ஆற்றல்மிக்க ஆளுமை, கவிதை வரிகள், தனித்துவமான குரல், ஒழுங்கற்ற அதே நேரம் கணிக்க முடியாத நடிப்பு, இவரது வாழ்க்கை இளமைக்கால மரணத்தைச் சுற்றியுள்ள வியத்தகு சூழ்நிலைகள் காரணமாக, மோரிசன் இசை விமர்சகர்களாலும் இரசிகர்களாலும் ராக் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க முன்னணி நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது புகழ் தலைமுறை இடைவெளியையும் இளைஞர்களிடம் வெளிப்படும் எதிர்கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புரட்சிகர அடையாளச் சின்னமாக இருந்தார்.[1]

1965-ஆம் ஆண்டில் இசைவிசைப்பலகைக் கலைஞர் ரே மான்சரெக் உடன் இணைந்து கலிபோர்னியாவின் வெனிஸில் டோர்ஸ் நிறுவனத்தை மோரிசன் நிறுவினார். மெரிக்காவில் இவர்களின் இசைக்குழுவின் தலைப்பு அறிமுகத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பாடலான "லைட் மை ஃபயர்" என்ற பாடல் பிரபலமாகும் வரை இந்தக் குழு தெளிவற்ற இலக்குடனே இருந்தது. மோரிசன் டோர்ஸுடன் மொத்தம் ஆறு படப்பிடிப்பு தளத்தில் உருவாக்கப்பட்ட இசைத் தொகுப்புகளைப் பதிவு செய்தார், இவை அனைத்தும் நன்றாக விற்பனையாயின. அவற்றில் பல விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றன. இசைக்குழு நேரலையில் நிகழ்ச்சிகள் நடக்கும் போது இவர் அடிக்கடி பேசும் வசன கவிதை பத்திகளை வழங்கினார். மன்சரெக் மோரிசனை மோரிசன் “கிப்பி எதிர்பண்பாட்டு கிளர்ச்சியை உள்ளடக்கியவர்" என்று கூறினார்.[2]

மோரிசன் வளர்த்துக் கொண்ட மதுசார்புத்தன்மை சில சமயங்களில் மேடையில் இவரது செயல்திறனைப் பாதித்தது.[3][4][5] 1971 ஆம் ஆண்டில், மோரிசன் எதிர்பாராத விதமாக தனது 27 வயது பாரிஸ் குடியிருப்பில் இறந்தார். இவரது இறப்பு தொடர்பாக பல முரண்பட்ட சாட்சி அறிக்கைகள் கிடைக்கப் பெற்றன. பிணக்கூறு அறிக்கை எதுவும் செய்யப்படாததால், மோரிசனின் மரணத்திற்கான காரணம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

ஜிம் மோரிசன் இறந்த பிறகு மேலும் இரண்டு இசைத் தொகுப்புகளை தி டோர்ஸ் பதிவு செய்திருந்தாலும், மோரிசனின் மரணம் இசைக்குழுவின் நல்வாய்ப்புகளைப் பெரிதும் பாதித்தது. மோரிசனின் இறப்பிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிந்தனர். 1993 ஆம் ஆண்டில், மோரிசன் மரணத்திற்குப் பிறகு மற்ற டோர்ஸ் உறுப்பினர்களுடன் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.[6] ரோலிங் ஸ்டோன், என். எம். இ மற்றும் கிளாசிக் ராக் ஆகியவை மோரிசனை எல்லா காலத்திலும் சிறந்த ராக் பாடகர்களில் ஒருவராக மதிப்பிட்டுள்ளன.[7][8][9][10]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

[தொகு]

தொடக்க காலமும் கல்வியும்

[தொகு]

[தொகு] மோரிசன் 1943 ஆம் ஆண்டு திசம்பர் ஆம் நாள் அன்று புளோரிடாவின் மெல்போர்னில் கிளாரா வர்ஜீனியா, லெப்டினன்ட் ஜார்ஜ் ஸ்டீபன் மோரிசன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[11] இவரது மூதாதையர்கள் ஸ்காட்டிஷ், ஐரிய ஆங்கில மரபினர் ஆவர்.[12][13] 1964-ஆம் ஆண்டில், டோன்கின் வளைகுடா சம்பவத்தின் போது அட்மிரல் மோரிசன் அமெரிக்க கடற்படைப் படைகளுக்கு தலைமை தாங்கினார். அடுத்த ஆண்டு, 1965 ஆம் ஆண்டில், இந்த சம்பவம் வியட்நாம் போரில் அமெரிக்க ஈடுபாட்டை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு முன்னணி சாக்குப்போக்காக இருந்தது.[14] மோரிசனுக்கு ஒரு இளைய சகோதரியான, ஆன் ராபின், 1947 இல் நியூ மெக்சிகோவின் அல்புகெர்க்கில் பிறந்தார். ,ஒரு தம்பி ஆண்ட்ரூ லீ மோரிசன், 1948 இல் கலிபோர்னியாவின் லாஸ் அல்டோஸில் பிறந்தார்.[15]

1947 ஆம் ஆண்டில், மோரிசன் மூன்று முதல் நான்கு வயதாக இருந்தபோது, பாலைவனத்தில் ஒரு கார் விபத்தினைக் கண்டதாகக் கூறப்படுகிறது, இதன் போது ஒரு டிரக் கவிழ்ந்தது மற்றும் சில பூர்வீக அமெரிக்கர்கள் சாலையின் ஓரத்தில் காயமடைந்தனர்.[16] இந்தச் சம்பவத்தை அவர் 1970 ஆம் ஆண்டு மோரிசன் ஹோட்டல் இசைத்தொகுப்பின் டோர்ஸ் பாடலான "பீஸ் ஃப்ராக்", 1978 ஆம் ஆண்டு மரணத்திற்குப் பிந்தைய இசைத் தொகுப்பான அமெரிக்கன் பிரேயரில் அவரது உரையாடல் நிகழ்ச்சிகளான "டான்ஸ் ஹைவே" மற்றும் "கோஸ்ட் சாங்" ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளார்.[17] இந்தச் சம்பவத்தை தனது வாழ்க்கையின் மிகவும் ஆக்கபூர்வமான நிகழ்வு என்று மோரிசன் விவரித்தார், மேலும் இவரது பாடல்கள், கவிதைகள் மற்றும் நேர்காணல்களில் படங்களில் இதைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.[18][19]

கவிதை மற்றும் திரைப்படம்

[தொகு]

வளரிளம் பருவத்தில் மோரிசன் எழுதத் தொடங்கினார். கல்லூரியில் அவர் தொடர்புடைய துறைகளான, மேடை நாடகம், திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் படித்தார்.[20]

த லார்ட்ஸ்/நோட்ஸ் ஆன் விஷன் மற்றும் த நியூ கிரீசர்ஸ் என்ற இரண்டு கவிதைப் பதிப்புகளை 1969-ஆம் ஆண்டு தானே வெளியிட்டார். த லார்ட்ஸில் , முக்கியமாக இடம், மக்கள், நிகழ்வுகள் பற்றிய சிறிய விவரிப்புகள் மற்றும் சினிமாவைப் பற்றிய மோரிசனின் கருத்துகள் ஆகியவை இருந்தன. த நியூ கிரியேசர்ஸின் வரிகள் வடிவத்தில், உணர்வில், வெளித் தோற்றத்தில் கவிதைகளைப் போல் இருந்தன. இந்த இரண்டு புத்தகங்களும் பின்னர் ஒன்றாக ஒரே புத்தகமாக இணைக்கப்பட்டு த லார்ட்ஸ் அண்ட் த நியூ கிரீசர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மோரிசனின் வாழ்நாளில் பிரசுரிக்கப்பட்ட எழுத்துகள் இவை மட்டுமே ஆகும்.

நோ ஒன் ஹியர் கெட்ஸ் ஔட் அலைவ் என்ற டேனி சுகர்மேனின் மோரிசன் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு முதலெண்ணங்கள் எழுதிய பீட் கவிஞர் மைக்கேல் மெக்ல்யூரோடு மோரிசன் நண்பரானார். மெக்ல்யூர் மற்றும் மோரிசன் பல எடுக்கப்படாத படங்களுக்காக ஒன்று சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மெக்ல்யூரின் பிரபலமான த பியர்ட் என்ற நாடகத்தின் திரைப்பட வடிவமும் அடங்கும். இது நடந்திருந்தால் மோரிசன் இதில் பில்லி த கிட் ஆக நடித்திருப்பார்.[21]

மோரிசன் இறந்த பிறகு, மோரிசனின் கவிதைகள் கொண்ட இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மோரிசனின் கவிதைகளின் உரிமையை வைத்திருந்த காதலி பேமிலா கர்சனின் பெற்றோர், புகைப்படக் கலைஞர் ஃப்ரேங்க் லிசியாண்ட்ரோ ஆகியோரால் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் தேர்வு செய்யப்பட்டு சரியான வரிசையில் வைக்கப்பட்டது. த லாஸ்ட் ரைட்டிங் ஆஃப் ஜிம் மோரிசன் முதல் தொகுப்பு, வைல்டர்னஸ் என்று பெயரிடப்பட்டது. இது 1988ம் ஆண்டு வெளியிடப்பட்ட உடனேயே நியூயார்க் டைம்ஸின் அதிக விற்பனையான புத்தகம் என்ற பெயரை பெற்றது. 1990-இல் வெளியிடப்பட்ட த அமெரிக்கன் நைட், தொகுப்பு 2 என்பதும் நல்ல வெற்றியைப் பெற்றது.

மோரிசன் இரண்டு தனித்தனி நேரங்களில் தொழிற்முறை சார்ந்த இசை ஒலிப்பதிவு கூடத்தில் தனது சொந்தக் கவிதையைப் பதிவு செய்தார். இவ்வாறான ஒலிப்பதிவுகள் முதல் முறை 1969-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸிலும் இரண்டாவது முறை 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாளிலும் நடந்தன. இரண்டாவது பதிவு நேரத்திற்கு மோரிசனின் பல தனிப்பட்ட நண்பர்கள் வந்திருந்தனர். இந்த 1969 காலகட்டத்தில் செய்யப்பட்ட சில ஒலிப்பதிவுகள் பூட்லெக் இசைத்தொகுப்பான த லாஸ்ட் பேரிஸ் டேப்ஸுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் இவை 1978ஆம் ஆண்டில் வெளியான த டோர்ஸின் அன் அமெரிக்கன் ப்ரேயர் இசைத்தொகுப்பிலும் உபயோகிக்கப்பட்டது. இசைப் பட்டியலில் இந்த இசைத் தொகுப்பு 54-ஆவது இடத்தை அடைந்தது.

மோரிசனின் சிறந்த ஆனால் காணப்படாத திரைப்பட முயற்சி HWY:அன் அமெரிக்கன் பாஸ்டோரல், 1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். மோரிசன் இந்தத் திட்டத்துக்கு பண உதவி செய்ததோடு திட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருக்க சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். திட்டத்திற்கு உதவியாக பால் ஃபெரேரா, ஃப்ரேங்க் லிசியாண்ட்ரோ மற்றும் பேப் ஹில் ஆகியோர் இருந்தனர். மோரிசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். கொலைகாரன்/கார் திருடனாக மாறும் இரவுப்பயணியாக நடித்தார். இந்தப் படத்திற்காக ஒலிப்பதிவுத்தடத்தை தேர்ந்தெடுக்க தனது நண்பரும் இசையமைப்பாளர்/பியானோ கலைஞர் ஃப்ரெட் மிரோவை கேட்டுக்கொண்டார்.[22][23]

ஜிம் மோரிசன் பங்குபெற்ற ஆவணப்படங்கள்

[தொகு]
  • த டோர்ஸ் ஆர் ஓப்பன் (1968)
  • லிவ் இன் ஈரோப் (1968)
  • லைவ் அட் த ஹாலிவுட் பவுல் (1968)
  • பீஸ்ட் ஆப் ஃப்ரெண்ட்ஸ் (1969)
  • த டோர்ஸ்: எ ட்ரிப்யூட் டூ ஜிம் மோரிசன் (1981)
  • த டோர்ஸ்: டான்ஸ் ஆன் பயர் (1985)
  • த சாப்ட் பாரேடு, எ ரெட்ரோஸ்பெக்டிவ் (1991)
  • பைனல் 24: ஜிம் மோரிசன் (2007), த பயோகிராபி சேனல்[24]
  • வென் யூ'ஆர் ஸ்ட்ரேன்ஞ் (2009)

ஜிம் மோரிசன் பற்றிய திரைப்படங்கள்

[தொகு]
  • த டோர்ஸ் (1991), இயக்குனரான ஆலிவர் ஸ்டோன் இயக்கிய ஒரு கற்பனைக்கதைத் திரைப்படமாகும், இதில் க்ரீகெர் மற்றும் டென்ஸ்மோர் மூலமான கேமியோக்களுடன் வால் கில்மெர் என்பவர் மோரிசனாக நடித்திருந்தார். சில விமர்சகர்கள் மூலம் கில்மெரின் நடிப்பு பாராட்டப்பட்டது. எனினும், இக்குழுவின் உறுப்பினர்கள், ஸ்டோனின் மூலம் மோரிசனின் பாத்திரம் சித்திரிக்கப்பட்டிருப்பதை விமர்சித்தனர், மேலும் இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பலக் காட்சிகள் சுத்தமான கற்பனை எனக் குறிப்பிடப்பட்டது.[25]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Huey, Steve. "Jim Morrison – Biography". AllMusic. Archived from the original on December 28, 2010. Retrieved July 11, 2017.
  2. ↑ Knopper, Steve (November 9, 2011). "Ray Manzarek's Doors". ChicagoTribune.com. Archived from the original on January 19, 2015. Retrieved April 16, 2014.
  3. ↑ Weiss, Jeff (February 16, 2012). "Surviving Doors Members Speak on Jim Morrison's Substance Abuse". L.A. Weekly. Archived from the original on November 11, 2016. Retrieved November 11, 2016.
  4. ↑ "Biography of Jim Morrison". Biography.com. Retrieved November 11, 2016.
  5. ↑ "The Story of Jim Morrison's Disastrous Last Doors Show". Ultimate Classic Rock. December 12, 2015. Archived from the original on July 21, 2017. Retrieved July 5, 2017.
  6. ↑ Cherry, Jim (January 11, 2017). "January 12, 1993: The Doors Enter the Rock & Roll Hall of Fame". The Doors Examiner, Redux இம் மூலத்தில் இருந்து October 8, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171008231514/http://doorsexaminer.com/doors-history-january-12-1993-the-doors-inducted-into-the-rock-roll-hall-of-fame/.
  7. ↑ "The Best Lead Singers of All Time". Rolling Stone. April 12, 2011. Archived from the original on July 29, 2011. Retrieved July 5, 2011.
  8. ↑ "100 Greatest Singers". Rolling Stone. November 27, 2008. Archived from the original on April 29, 2012. Retrieved September 16, 2020.
  9. ↑ "Michael Jackson Tops NME's Greatest Singers Poll". NME. June 21, 2011. Archived from the original on June 27, 2011. Retrieved May 5, 2023.
  10. ↑ "50 Greatest Singers in Rock". Classic Rock. No. 131. May 2009.
  11. ↑ "Soft Parade 6571". Ivbc.free.fr. Archived from the original on October 4, 2013. Retrieved April 16, 2014.
  12. ↑ Dead Famous: Jim Morrison பரணிடப்பட்டது ஆகத்து 27, 2008 at the வந்தவழி இயந்திரம்
  13. ↑ "Geneastar Family Tree - Jim Morrison".
  14. ↑ "Jim Morrison's Father and The Gulf of Tonkin Incident. The Doors Examiner 2017". Archived from the original on May 1, 2018. Retrieved June 10, 2022.
  15. ↑ "Jim Morrison". The Biography Channel. Archived from the original on September 20, 2010. Retrieved March 17, 2021.
  16. ↑ Partridge, Kenneth (September 13, 2021). "11 Surprising Facts About Jim Morrison". Mental Floss. Archived from the original on July 26, 2022. Retrieved July 26, 2022.
  17. ↑ Weidman, Rich (2011). The Doors FAQ: All That's Left to Know About the Kings of Acid Rock. Rowman & Littlefield. p. 196. ISBN 978-1617131141.
  18. ↑ Davis, Stephen (2004). Jim Morrison: Life, Death, Legend. Ebury Press. p. 8. ISBN 978-0-09-190042-7. It was the first time I discovered death, he recounted many years later, as the tape rolled in a darkened West Hollywood Recording studio.
  19. ↑ "Fans push to preserve Jim Morrison's New Mexico home". APNews.com. Associated Press. May 6, 2015. Archived from the original on April 4, 2023. Retrieved November 10, 2021.
  20. ↑ Notable Actors - UCLA School of Theater, Film and Television, archived from the original on 2008-12-07, retrieved 2008-12-03
  21. ↑ McClure, Michael, Michael McClure Recalls an Old Friend, archived from the original on 2011-07-09, retrieved 2008-09-09
  22. ↑ Unterberger, Richie, Liner Notes for Diane Hildebrand's "Early Morning Blues and Greens, retrieved 2008-08-24
  23. ↑ HWY: An American Pastoral, retrieved 2008-08-24
  24. ↑ பயோகிரபி அலைவரிசை ஆவணப்படம்
  25. ↑ த டோர்ஸ் (1991)

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_மோரிசன்&oldid=4641323" இலிருந்து மீள்விக்கப்பட்டது