ஜிகம்ப்ரிஸ் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிகம்ப்ரிஸ்
Gcompris-logo-square.png
Gcompris screenshots.png
அண்மை வெளியீடு15.02 / பெப்ரவரி 1, 2015; 7 ஆண்டுகள் முன்னர் (2015-02-01)
மொழி
இயக்கு முறைமைலினக்ஸ், விண்டோஸ், மாக் இயக்குதளம்
கிடைக்கும் மொழி50 க்கும் மேற்பட்ட மொழிகள்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைகல்வி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்gcompris.net

ஜிகம்ப்ரிஸ் (GCompris) என்பது ஒரு கல்விக்கான கட்டற்ற மென்பொருள். இம் மென்பொருளானது கல்வியுடன் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு 2 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. இது அடிப்படை அறிவுடன், படைப்பற்றல், பகுப்பாய்வு போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. இதன் நிரல் சி மற்றும் பைதான் மொழியை கொண்டு எழுதியுள்ளனர். இது குனூ பொதுமக்கள் உரிமம் கீழ் வழங்கப்படுகிறது. மேலும், இது குனு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது.

சிறப்பு அம்சமங்கள்[தொகு]

  • கணினியை பயன்படுத்தல்: விசைப்பலகை, சுட்டி, வெவ்வேறு சொடுக்கி அசைவுகள், …
  • கணிதம்: நினைவு அட்டவணை, கணக்கெடுப்பு, எடை கண்டறிதல், கண்ணாடி பிம்பம், …
  • அறிவியல்: நீர் சுழற்சி, நீர்மூழ்கி கப்பல், மின்சார தூண்டல் …
  • புவியியல்: வரைபடம் குறித்தல்
  • விளையாட்டுக்கள்: சதுரங்கம், நினைவு, சுடோகு இணைக்க …
  • படித்தல்: வாசிப்பு பயற்சி...
  • இசை: கற்றல், கற்பித்தல்...
  • மற்றவை: பிரபலமான ஓவியங்கள் தீட்டுதல், திசையன் வரைவு, தயாரித்தல் புதிர், …

குறிப்புகள்[தொகு]

« GCompris – GNU Project – Free Software Foundation », lists.gnu.org, Sept 20, 2011.]

வெளி இணைப்புகள்[தொகு]