ஜார்ஜ் எல்லேரி ஏல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் எல்லேரி ஃஏல்
ஜார்ஜ் எல்லேரி ஃஏல், அண். 1913
பிறப்பு(1868-06-29)சூன் 29, 1868
சிகாகோ, இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 21, 1938(1938-02-21) (அகவை 69)
பசதேனா,கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
வானியற்பியல்[1]
பணியிடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம், கார்னிகி அறிவியல் நிறுவனம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் (கால்டெக்)
கல்வி கற்ற இடங்கள்மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)
அறியப்படுவதுசூரியக் கதிர்நிரலியல்
விருதுகள்
துணைவர்எவெலினா கான்கிளின் ஃஏல்

ஜார்ஜ் எல்லேரி ஃஏல் (George Ellery Hale) (ஜூன் 29, 1868 -பிப்ரவரி 21, 1938) ஓர் அமெரிக்க சூரிய வானியலாளர் ஆவார். இவர் சூரியக் கரும்புள்ளிகளின் காந்தப் புலத்தைக் கண்டுபிடித்துப் பெயர்பெற்றவர்.இவர் பல உலக பெயர்பெற்ற தொலைநோக்கிகளை வடிவமைத்துக் கட்டி உருவாக்கியவர்; அவற்றில், யெர்க்கேசு வான்காணக 40 அங்குலத் தொலைநோக்கியும் மவுண்ட் வில்சன் வான்காணகத்தின் 60 அங்குல ஃஏல் தொலைநோக்கியும் 100 அங்குலத் ஃஊக்கர்த் தொலைநோக்கியும் பலோமார் வான்காணக 200 அங்குல ஃஏல் தொலைநோக்கியும் ஆகியவை குறிப்பிட்த் தகுந்தவை. இவை அனைத்துமே ஒளித்தெறிப்புவகை தொலைநோக்கிகளாகும்.[2]

வாழ்க்கை[தொகு]

ஜார்ஜ் எல்லேரி ஃஏல் 1868 ஜூன் 29 இல் இல்லினாயிசில் உள்ல சிகாகோ நகரில் பிறந்தார். இவரது தந்தையார் வில்லியம் எல்லேரி ஃஏல் ஆவார். இவரது தாயார் மேரி பிரவுன் ஆவார்.[3] இவர் இங்கிலாந்து எர்ட்ஃபோர்டுசயரைச் சேர்ந்த வாட்டநாந்சுடோனில் இருந்த தாமசு ஃஏல் கால்வழியினர், தாமசின் மகன் 1640 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார்.[3]

தகைமை[தொகு]

ஜார்ஜ் எல்லேரி ஃஏல், பலோமார் வான்காணகச் சிலை

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்
  1. "George Ellery Hale (1868–1938)". பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  2. Steele, Diana (March 20, 1997). "Yerkes Observatory: A century of stellar science" (in English). The University of Chicago Chronicle 16 (13). http://chronicle.uchicago.edu/970320/yerkes.shtml. பார்த்த நாள்: October 29, 2015. 
  3. 3.0 3.1 Adams 1939, p. 181.
  4. Peter Browning (2011). Sierra Nevada Place Names: From Abbot to Zumwalt. Great West Books. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780944220238.
  5. Goldin, Greg (2015-05-03). "Home of the Stars: A monument to the universe lies hidden behind a hedge in Pasadena". The California Sunday Magazine. Archived from the original on 2015-05-13.
நூல்தொகை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_எல்லேரி_ஏல்&oldid=3581970" இலிருந்து மீள்விக்கப்பட்டது