ஜாமினி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாமினி ராய், ஓவியர்
பிறப்பு11 ஏப்ரல் 1887
பெலியதோர், பாங்குரா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு24 ஏப்ரல் 1972
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தாயும் சேயும் ஓவியம்
விருதுகள்பத்ம விபூசன் (1954)

ஜாமினி ராய் (Jamini Roy) (11 ஏப்ரல் 1887 - 24 ஏப்ரல் 1972) 1954-இல் பத்ம விபூசன் விருது பெற்ற இந்திய ஓவியர் ஆவார்.[1] இவர் இந்திய நுண்கலையில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டவர். இந்தியாவைப் பாரத மாதாவாக வரைந்த புகழ்பெற்ற ஓவியரான அபநீந்திரநாத்தின் மாணாக்கரில் ஜாமினி ராயும் ஒருவர்.

இளமையும் பின்னனியும்[தொகு]

மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தின் பெலியதோர் எனும் கிராமத்தில் 11 ஏப்ரல் 1887-இல் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர் ஜாமினி ராய்[2]

பதினாறு வயதில் கொல்கத்தா அரசு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து,[2] கல்லூரி முதல்வரான அபநீந்திரநாத் தாகூரின் மாணவராகச் சேர்ந்து, பிரித்தானியப் பாணி ஓவியக் கலையைப் பயின்றார். ஜாமினி ராய் 1908-இல் ஓவியத்தில் நுண் கலை பட்டயப் படிப்பை முடித்தர். இந்தியாவின் முக்கியமான ஓவியர்களின் ஒருவரான ஜாமினி ராய் தனது ஓவிய படைப்புகளில் கிராமப்புற சூழல், சாதாரண மக்கள், விலங்குகள் மற்றும் நுண்கலைகளை முன்னிலைப்படுத்தியவர். இதனால் இந்திய ஓவிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றவர்.[3]

பெற்ற சிறப்புகளும், விருதுகளும்[தொகு]

 • தில்லி நவீன கலைகளுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் ராயின் கோபினி, மூன்று புஜரான்ஸ், நிற்கும் பெண்ணின் உருவம் போன்ற ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 • 1934-இல் சிறப்பான ஓவியத்திற்காக, பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயிடமிருந்து ஜாமினி ராய் தங்கப் பதக்கம் பெற்றவர்.
 • இவரது ஓவியப் படைப்புகள் 1946-இல் இலண்டனிலும், 1953-இல் நியுயார்க்கிலும் காட்சிப்படுத்தப்பட்டன.
 • 1954-இல் பத்ம விபூசன் விருது பெற்ற இந்திய ஓவியர் ஆவார்.
 • 1955-இல் லலித் கலா அகாதமி நிறுவனம் வழங்கும் நுண் கலைக்கான உயர் விருதுதினை முதன்முதலில் பெற்றவர் ஜாமினி ராய் ஆவார்.[4]
 • 1976-இல் இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இந்திய ஓவியக் கலையின் முக்கியமான ஒன்பது தலைமைக் கலைஞர்களின் ("Nine Masters") கலை மற்றும் அழகியல் வடிவில் அமைந்த ஓவியங்களை இந்தியாவின் பண்பாட்டுக் கருவூலமாக அறிவித்தது.[5] (ஒன்பது தலைமை ஓவியர்கள்: ரவி வர்மா, இரவீந்திரநாத் தாகூர், ஷேர்-கில், நந்தலால் போஸ், ககனேந்திரநாத் தாகூர், அபநீந்திரநாத் தாகூர், ஜாமினி ராய், சைலேஸ் முகர்ஜி மற்றும் நிக்கோலஸ் ரோசிச் ஆவர்).
 • புகழ்பெற்ற இந்திய ஓவியர் ஜாமினி ராயின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு 11 ஏப்ரல் 2017 அன்று அவரின் புகப்பெற்ற படமான வண்ணமிகு குதிரை படம் ஒன்றைக் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
 2. 2.0 2.1 "Jamini Roy (1887–1972) Biography". Indian Art Circle. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
 3. Jamini Roy - Journey To The Roots. NGMA. 2013.
 4. "List of Fellows". Lalit Kala Akademi. Archived from the original on 27 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 5. "Nine Masters". Archived from the original on 2010-12-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாமினி_ராய்&oldid=3775510" இலிருந்து மீள்விக்கப்பட்டது