ஜான் வான் நியுமேன்
தோற்றம்
| ஜான் வான் நியூமேன் John von Neumann | |
|---|---|
1940 இல் நியுமேன் | |
| பிறப்பு | Neumann János Lajos திசம்பர் 28, 1903 புடாபெஸ்ட், ஆஸ்திரியா/ஹங்கேரி |
| இறப்பு | பெப்ரவரி 8, 1957 (அகவை 53) வாசிங்டன், டி. சி., அமெரிக்கா |
| வாழிடம் | அமெரிக்கா |
| தேசியம் | அமெரிக்கர்/ஹங்கேரியர் |
| துறை | கணினியியல், பொருளியல், கணிதம், இயற்பியல் |
| பணியிடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மேம்பட்ட கல்விக் கழகம் லாசு அலமோசு தேசிய ஆய்வகம் |
| கல்வி கற்ற இடங்கள் | சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் |
| பின்பற்றுவோர் | --> |
| விருதுகள் | பாசர் நினைவுப் பரிசு (1938), என்றிக்கோ பெர்மி விருது (1956) |
ஜான் வான் நியூமேன் (John von Neumann, 28 திசம்பர், 1903 - 8, பெப்ரவரி, 1957) என்பவர் பல துறை மேதை ஆவார். கணிதம், கணினியியல், பொருளியல் எனப் பலதரப்பட்ட துறைகளில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து கோட்பாடுகளையும், கருவிகளையும் உருவாக்கியவர். ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தார்.[1] கணிதத்தில் விளையாட்டுக் கோட்பாட்டை (game theory) உருவாக்கினார், தொகுப்புக் கோட்பாடு மற்றும் செயல்பாட்டுப் பகுப்பாய்வில் அடிப்படை முன்னேற்றங்களைச் செய்தார். இயற்பியலில் குவாண்டம் இயக்கவியலுக்கும், மன்ஹாட்டன் திட்டத்திற்கும் பங்களித்தார். கணினி அறிவியல் துறையில் நவீன கணினிகளின் அடிப்படையாக இருக்கும் வான் நியூமன் கட்டமைப்பை உருவாக்கினார். பொருளாதாரத்தில் இவரது விளையாட்டுக் கோட்பாடு பணிப் பொருளாதாரப் பகுப்பாய்வில் புரட்சியை ஏற்படுத்தியது.
குறிப்புகள்
[தொகு]- ↑ இஸ்க்ரா, உலகை வியக்கவைத்த ஜான், கட்டுரை, இந்து தமிழ் 25 சனவரி, 2023
இணைப்புகள்
[தொகு]- பொருளியலில் நியூமேனின் பங்கு பரணிடப்பட்டது 2008-12-27 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- கூகுள் புரொபைலில் நியூமேன் பற்றி
- வான் நியூமேன் கணினியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு M
- John von Neumann (1903–1957). Library of Economics and Liberty (2nd ed.). Liberty Fund. 2008.
{{cite book}}:|work=ignored (help)
