உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் சீனா
2024-இல் ஜான் சீனா
பிறப்புஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி சீனா
ஏப்ரல் 23, 1977 (1977-04-23) (அகவை 48)
வெஸ்ட் நியூபரி, மாசச்சூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
படித்த கல்வி நிறுவனங்கள்இஸ்பிரிங்பீல்ட் கல்லூரி (BS)
பணி
  • நடிகர்
  • தொழில்முறை மல்யுத்த வீரர்
  • இராப் இசைக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை (மல்யுத்தவீரர்)
2002–2005, 2014 (இசைக்கலைஞர்)
2006தற்போது வரை (நடிகர்)
வாழ்க்கைத்
துணை
  • எலிசபெத் ஹியூபெர் தேவ்
    (தி. 2009; ம.மு. 2012)
  • சை சாரியாட்சாதெ
    (தி. 2020)
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்ஜான் சீனா[1]
த புரோட்டோடைப்[2]
ஜான் சேனா[2]
மிஸ்டர் . பி[3]
Billed height6 அடி 1 அங்குலம்[4]
பயிற்சியாளர்அல்டிமேட் புரோ ரெட்ஸ்லிங்[5]
கிரிஸ்டோபர் டேனியல்ஸ்[2]
மைக் பெல்[2]
டாம் ஹோவார்டு[2]
பிட் பினாலே[6]
முதல் போட்டிநவம்பர் 5, 1999[2]
கையொப்பம்

ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி சீனா [7] (பிறப்பு ஏப்ரல் 23, 1977)[5] ஒரு அமெரிக்க நடிகரும் மற்றும் தொழில்முறை மல்யுத்த வீரரும், ஹிப்-ஹாப் இசைக்கலைஞரும் ஆவார் ஆவார். ஒரு மல்யுத்த வீரராக, இவர் 2001 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

தொழில் ரீதியான மல்யுத்தத்தில் ஜான் ஏழு முறை உலக வாகையாளராக இருந்தார். இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் போட்டிகளில் ஐந்து முறையும் உலக வாகையாளர் போட்டியை இரண்டு முறையும் வென்றிருக்கிறார். கூடுதலாக அமெரிக்க மல்யுத்த வாகையாளர் போட்டியையும் மூன்று முறையும், வேர்ல்ட் டேக் டீம் வோட்டியை இரண்டு முறையும் ஜான் வென்றிருக்கிறார் (ஷாவ்ன் மைக்கேல்ஸுடன் ஒருமுறை, பாடிஸ்டாவுடன் ஒரு முறை). 2008 ஆம் ஆண்டு இராயல் ரம்புள் ஆட்டத்தையும் ஜான் வென்றிருக்கிறார்.

2000 ஆம் ஆண்டின் ஜான் இவரது மல்யுத்தத் தொழில்வாழ்க்கையை அல்டிமேட் ப்ரோ ரெஸ்ட்லிங் நிறுவனத்தின் லம் ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டு உலக மல்யுத்த கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஓஹியோ வேல்லி மல்யுத்தப் போட்டிக்கு ஜான் அனுப்பப்பட்டார். அங்கு இவர் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மல்யுத்தம் தவிர யூ காண்'ட் சீ மீ என்ற ராப் இசைத்தொகுப்பையும் ஜான் வெளியிட்டிருக்கிறார். அது அமெரிக்காவின் பில்போர்ட் 200 தரவரிசையில் 15 வது இடம்பிடித்தது. இவர் த மாரைன் (2006) மற்றும் 12 ரவுண்ட்ஸ் (2009) ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.[8] மேன்ஹண்ட், டீல் ஆர் நோ டீல், MADtv, சேட்டர்டே நைட் லைவ் மற்றும் பங்க்'ட் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஜான் பங்கேற்றுள்ளார். பாஸ்ட் கார்ஸ் அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்: த ஜில்லெட் யங் கன்ஸ் செலபரட்டி ரேஸில் ஜான் பங்குபெற்றார். அப்போட்டியில் இறுதிச்சுற்றிற்கு முன்னுள்ள போட்டி வரை முன்னேறி மூன்றாவது இடம்பிடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஏப்ரல் 23, 1977 அன்று மாசச்சூசெட்ஸ் மாநிலத்திலுள்ள வெஸ்ட் நியூபரியில் ஜான் பிறந்தார்.[5] இவருக்கு டான், மாட், ஸ்டீவ் மற்றும் சீன் ஆகிய சகோதர்கள் உள்ளனர். ஜான் தனது குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்தவர்.[9] கஷ்ஷிங் அகாடமியில் பட்டம் பயின்ற பிறகு, மாசச்சூசெட்சின் ஸ்பிரிங்ஃபீல்டு நகரத்தில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் ஜான் கல்வி பயின்றார்.[10] கல்லூரியில் அனைத்து-அமெரிக்க மைய கல்லூரி கால்ப்பந்து அணி டிவிசன் III இல் இடம்பெற்றிருந்தார்.[11] அதில் இவர் 54 எண்ணிட்ட உடையை அணிந்திருந்தார்.[10] அதனை இவர் இன்றும் சில நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்.[12][13] 1998 ஆம் ஆண்டு ஸ்பிரிங்ஃபீல்டில் உடற்பயிற்சி உடற்செயலியலில் பட்டம் பெற்றார்.[14] பின்னர் உடல் கட்டுமானத்தை தொழில் வாழ்க்கையாகக் கொண்டார். மேலும் இவர் உல்லாச ஊர்தி நிறுவனத்திற்காக ஒப்பந்த ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.[15]

மல்யுத்தத் தொழில் வாழ்க்கை

[தொகு]

ஜான் தொழில்முறை மல்யுத்த வீரராக தனது பயிற்சியை 2000 ஆம் ஆண்டு அல்டிமேட் ப்ரோ ரெஸ்ட்லிங் (UPW) மூலமாக இயக்கப்படும் கலிஃபோர்னியா-சார்ந்த "அல்டிமேட் பல்கலைக்கழகத்தில்" பயிற்சி பெறுவதுடன் தொடங்கினார். ஜான் உள்-சுற்று பங்கில் இடம்பிடித்தவுடன் புரோடோடைப் என அறியப்படும் அரை-ரொபோடிக் பாத்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.[16][17] இந்த காலகட்டத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இன்சைடு ப்ரோ ரெஸ்ட்லிங் ஸ்கூலில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது. சில மாதங்களிலேயே 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜான் அல்டிமேட் ப்ரோ ரெஸ்ட்லிங் ஹெவிவெயிட் சேம்பியன்ஷிப்பைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டு உலக மல்யுத்த கூட்டமைபின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[18]

கர்ட் ஆங்கிலுடன் மல்யுத்தத்தில் ஜான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Cena: My Life[DVD].
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Kreikenbohm, Philip. "John Cena profile". Cagematch.net. Archived from the original on April 14, 2025. Retrieved June 4, 2025.
  3. Kreikenbohm, Philip. "John Cena's matches in Ohio Valley Wrestling". Cagematch.net. Archived from the original on June 6, 2025. Retrieved June 6, 2025.
  4. "John Cena". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on November 19, 2016. Retrieved June 7, 2025.
  5. 5.0 5.1 5.2 "John Cena bio". Slam! Sports. Canadian Online Explorer. February 6, 2005. Archived from the original on June 29, 2012. Retrieved May 5, 2007.
  6. "Finlay". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on April 14, 2019. Retrieved June 7, 2025. By 2005, Finlay had tired of teaching the likes of John Cena and Randy Orton to fight and decided that he had lots of fight left himself.
  7. "Fast Cars & Superstars - Gillette Young Guns Celebrity Race Driver Bios". ABC Media Net. Archived from the original on 2014-10-06. Retrieved 2007-06-11.
  8. Luce, Patrick (2007-01-04). "WWE Superstar John Cena bust onto DVD with The Marine". Monster & Critics. Archived from the original on 2008-05-22. Retrieved 2008-06-12.
  9. "John Cena: The Champ is Here". IGN. Archived from the original on 2012-02-04. Retrieved 2007-05-05.
  10. 10.0 10.1 "1998 Football Roster". Springfield College. Archived from the original on 2014-02-03. Retrieved 2007-05-05.
  11. "John Cena: biography". Yahoo!. Archived from the original on 2007-05-10. Retrieved 2007-05-11.
  12. "John Cena Bulldog Basketball Jersey". WWE. Retrieved 2007-05-06.
  13. "John Cena Personalized Beware of Dog Football Jersey". WWE. Retrieved 2008-01-03.
  14. "John Cena star bio". Tribute.ca. Retrieved 2007-05-05.
  15. "Inside WWE's New Magazine". WWE. Retrieved 2007-05-05. Who would have guessed John Cena was once a limo driver
  16. "John Cena's WWE History". UPW. Archived from the original on 2007-07-30. Retrieved 2007-07-04.
  17. "Ultimate University/UPW alumni". UPW. Retrieved 2007-03-29.
  18. "Ohio Valley Wrestling results (2001)". Online World of Wrestling. Retrieved 2007-07-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜான் சீனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_சீனா&oldid=4292591" இலிருந்து மீள்விக்கப்பட்டது