ஜான் ஆன்வெல்ட்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ஜான் ஆன்வெல்ட் | |
---|---|
![]() | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1884 விலஜாண்டி கவுண்டி |
இறப்பு | 11 திசம்பர் 1937 (அகவை 53) மாஸ்கோ |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி |
விருதுகள் | Order of Lenin |
ஜான் ஆன்வெல்ட் (Jaan Anvelt, ஏப்ரல் 18, 1884 – டிசம்பர் 11, 1937) என்பவர் எஸ்தோனியாவின் ஒரு புரட்சித் தலைவர் ஆவார். இவர் எஸ்தோனியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், சோவியத் எஸ்தோனியாவின் முதலாவது பிரதமராகவும் இருந்தவர். 1937 ஆம் ஆண்டில் ஸ்டாலின் ஆட்சியின் போது இவர் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அக்டோபர் புரட்சி[தொகு]
1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளில் (பழைய ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 23), போல்ஷெவிக் தலைவராக இருந்த ஜான் ஆன்வெல்ட் தனது இடதுசாரி புரட்சிவாதிகளுக்குத் தலைமை வகித்து எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரை அடைந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.