ஜாக் மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் மா
2008 உலக பொருளியல் கருத்தரங்கில் ஜாக் மா
பிறப்புமா யுன்
செப்டம்பர் 10, 1964 (1964-09-10) (அகவை 59)
அங்சூ, செஜியாங், சீனா
இருப்பிடம்அங்சூ
படித்த கல்வி நிறுவனங்கள்அங்சூ நார்மல் பல்கலைக்கழகம்
பணிசெயல் தலைவர் அலிபாபா குழுமம்
சொத்து மதிப்பு $21.8 பில்லியன் (2014)[1]
வாழ்க்கைத்
துணை
திருமணமானவர்
பிள்ளைகள்2

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் மா.

Ma Yun
சீன எழுத்துமுறை 馬雲
எளிய சீனம் 马云

ஜாக் மா (Jack Ma) அல்லது மா யுன் (马云) (பிறப்பு செப்டம்பர் 10, 1964)[2] சீன தொழில் முனைவர் ஆவார். இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன நாட்டில் வாழும் சீனராவார்.[3]சீன அரசின் கொள்கைகளை ஜாக் மா வெளிப்படையாக விமர்சனம செய்ததால் 2020-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து ஜாக் மா வெளியுலகிற்கு தென்படவில்லை.[4]

இளமைக் காலம்[தொகு]

மா சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் செப்டம்பர் 10, 1964இல் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார்.[5] பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில் பயின்றார் (இது தற்போது அங்சூ நார்மல் பல்கலைக்கழகம் எனப்படுகிறது).[6] 1988இல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார்.

பணிக்காலம்[தொகு]

1995இல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார்; இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்; இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது. 1999இல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார்; சீனாவில் இயங்கிய வணிகரிடை சந்தைக்கடையான இது 240 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இருந்த 79 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக தற்போது வளர்ந்துள்ளது. செப்டம்பர் 2014இல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப முதல் பொதுப்பங்கு வெளியீடு அறிக்கையை வெளியிட்டது.[8] மா தற்போது அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக உள்ளார். இக்குழுமத்தில் அலிபாபா.கொம், டாவோபாவோ சந்தையிடம், இட்டிமால், இடாவோ, அலிபாபா மேகக் கணிமை, யுகுசுவான், 1688.கொம், அலிஎக்சுபிரசு.கொம், அலிப்பே என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.

நவம்பர் 2012இல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா "டிரில்லியன் ஹூ" எனப்படுகிறார்; சீனமொழியில் "டிரில்லியன் யுவான் மார்கிசு" எனப் பொருள்படும்.

தனி வாழ்க்கை[தொகு]

ஜாக் மா சாங் யிங்கை மணந்துள்ளார்.[9] இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.[10]

மேற்சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_மா&oldid=3645463" இருந்து மீள்விக்கப்பட்டது