உள்ளடக்கத்துக்குச் செல்

ஜவகர்லால் நேரு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டுப் புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது (Jawaharlal Nehru Award for International Understanding) என்பது இந்திய அரசினால் 1965ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு விருதாகும். மறைந்த பாரதப் பிரதமரான நேரு தன் வாழ்முழுதும் உலக அமைதிக்காகப் பாடுபட்டதைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது அவர் பெயரால் நிறுவப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு மக்களிடையே அன்பு, நட்பு மற்றும் புரிதலை வளர்க்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது இந்திய ரூபாய் 2.5 மில்லியனுக்கு பணமுடிப்பைக் கொண்டது. அன்னை தெரேசா (1969), நெல்சன் மண்டேலா (1979), எகுடி மெனுகின் (1968) போன்றோர் ஜவஹர்லால் நேரு விருது பெற்றோருள் சிலர்.

விருது பெற்றவர்கள்

[தொகு]
வரிசை எண் ஆண்டு நபர் குறிப்பு
1 1965 ஊ தாண்ட் ஐக்கிய நாடுகள் அவையின் நான்காவது பொதுச்செயலாளர்
2 1966 மார்ட்டின் லூதர் கிங் (இறப்பின் பின்)
3 1967 கான் அப்துல் கபார் கான் "எல்லை காந்தி"
4 1968 யெகுதி மெனுஹின் வயலின் கலைஞர்
5 1972 அன்னை தெரசா
6 1970 கென்னத் டி கௌண்டா சாம்பியா குடியரசின் முதல் அதிபர்
7 1971 மார்ஷல் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ யுகோஸ்லாவியா நாட்டு அதிபர்
8 1969 ஆந்த்ரே மால்ரோ பிரான்ஸ் ராஜதந்திரி
9 1973 ஜூலியஸ் நையெரெ தான்சானியா அதிபர்
10 1974 ரௌல் ப்ரெபிஷ்ச் அர்ஜென்டினா நாட்டு பொருளியல் வல்லுநர்
11 1975 யோனாஸ் சால்க் முதல் போலியோ தடுப்பூசியை கொடுத்தவர்
12 1976 குயுசெப் டுக்கி
13 1977 துள்சி மெகர்ஜி ஷ்ரேஸ்தா
14 1978 நிச்சிதட்சு பூஜி
15 1979 நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க அதிபர்
16 1980 பார்பரா வார்ட் பொருளியல் வல்லுநர்
17 1981 ஆல்வா மீர்தல் மற்றும் கன்னர் மீர்தல் பொருளியல் வல்லுநர்
18 1982 லியோபோல்ட் செடர் செங்கோர் செனிகல் நாட்டு அதிபர்
19 1983 ப்ரூனோ கிரேஸ்கீ
20 1984 இந்திரா காந்தி (இறப்பின் பின்னர்)
21 1985 ஒலோப் பால்மே(இறப்பின் பின்னர்) சுவீடன் அதிபர்
22 1987 ஜாவியெ பிரெ க்யுல்லார் ஐக்கிய நாடுகள் அவை பொதுசெயலாளர்
23 1988 யாசேர் அராபத் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்
24 1989 ராபர்ட் காப்ரியல் முகாபே ஜிம்பாப்வே அதிபர்
25 1990 ஹெல்முட் கோல்
26 1991 அருணா அசப் அலி
27 1992 மௌரிஸ் ஸ்ட்ராங்க்
28 1993 ஔங் சான் சூ கீ
29 1994 மகாதீர் பின் மொகம்மது மலேசியப் பிரதமர்
30 1995 ஹோஸ்னி முபாரக் எகிப்து பிரதமர்
31 2003 கோ சோக் டோங்க் சிங்கப்பூர் பிரதமர்
32 2004 (இன்னும் வழங்கப்படவில்லை) சுல்தான் கபூஸ் பின் சைய்த் அல் சைய்த்
33 2005 வாங்காரி மாதாய்
34 2006 லூயி இனாசியோ லூலா த சில்வா
35 2007 ஓலாபுர் ரக்னர் கிரிம்சன்
36 2008
37 2009 ஏஞ்சலா மெர்க்கெல் ஜெர்மனி வேந்தர்
  • 1986 - பரிசு வழங்கப்படவில்லை
  • 1996-2002 - பரிசு வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவகர்லால்_நேரு_விருது&oldid=3213607" இலிருந்து மீள்விக்கப்பட்டது