உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலவந்தப்படுத்தி பொது அதிகாரங்களை, ஜப்பான் அங்கிகரித்த அமைச்சரான லீ வாங்-யொங்விடம் கொரிய பேரரசர் ஆகஸ்ட் 22, 1910 அளித்தார்.

ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் (இறகனா:にっかんへいごうじょうやく, நிக்கான் ஹெய்ங்கோ ஜோயகு) 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 22 தேதி கொரியா மற்றும் ஜப்பானிய பேரரசின் பிரதிநிதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டு, பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29 தேதியில் இது நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், கொரியாவை ஜப்பானிய அரசு நிர்வகிக்கத் தொடங்கியது. இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் எட்டு முக்கிய அம்சங்கள் இருந்தன. முதலாம் அம்சத்தின்படி கொரியப் பேரரசர், ஜப்பானிய பேரரசருக்கு கொரியாவின் அனைத்து அரசுரிமைகளை முழுமையாகவும் நிரந்தரமாகவும் ஒப்படைத்துவிட்டார். ஆனால் இந்த ஒப்பந்ததை ஜப்பானை எதிர்த்த கொரிய தேசியவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான தென் கொரிய அரசும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1965 இல் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான அடிப்படை உறவுகள் ஒப்பந்தம் இந்த இணைப்பு ஒப்பந்ததையும் இதன் பின்னால் கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.

வெளி இணைப்புகள்[தொகு]