ஜக்கூர் ஏரி
Appearance
ஜக்கூர் ஏரி | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
Metro | பெங்களூர் |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560064 |
ஜக்கூர் ஏரி[1] (Jakkur Lake) என்பது இந்தியாவில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இது நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி ஜக்கூர் என்ற இடத்தின் பெயரிலிருந்து இதன் பெயரைப் பெற்றது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 35 ha (86.5 ஏக்கர்கள்) ஆகும். இந்த ஏரியில் பல தீவுகள் உள்ளன. காவிரி நீர் கிடைக்காத அருகிலுள்ள கிராமங்களுக்கு இந்த ஏரி குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.[2] இந்த ஏரியானது மற்ற நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகளை அதிக அளவில் ஈர்த்து வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.[3] சூழல் மாசுபாட்டிலிருந்து, ஏரி புத்துயிர் பெற்றதிலிருந்து, ஏரியில் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கூழைக்கடா போன்ற நீர்ப் பறவைகள் கூடு கட்டத்தொடங்கியுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.thebetterindia.com/163949/jakkur-bengaluru-lake-pollution-cleaning-news/ Jakkur lake in news
- ↑ G N, Prashanth (14 September 2014). "Jakkur lake cries for help". Deccan Herald. http://www.deccanherald.com/content/430764/jakkur-lake-cries-help.html.
- ↑ "The death and rebirth of Jakkur lake". Deccan Herald. 6 June 2011. http://www.deccanherald.com/content/167000/death-rebirth-jakkur-lake.html.
- ↑ Upadhye, Amit S. (20 July 2015). "Lake turns pink, pelicans throng Jakkur". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/150720/nation-current-affairs/article/lake-turns-pink-pelicans-throng-jakkur.