ச. மாரீஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்திவேல் மாரீஸ்வரன், (பிறப்பு: 23 செப்டம்பர் 2000)[1] இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மே 2022-இல் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியில் இடம் பெற்ற இரண்டு தமிழர்களில் இருவரில் மாரீஸ்வரனும் ஒருவர் ஆவார்.[2] [3]மற்றவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. கார்த்திக் ஆவார். மாரீஸ்வரன் மே 2022 அன்று தேசிய வளைதடி பந்தாட்ட அணியில், நடுக்களப் பகுதியில் (Midfielders) விளையாடும் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4][5]

இவரும், செ. கார்த்திக்கும் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆக்கி மாணவர் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள் ஆவார்.

இவர் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தா மாநகரத்தில் 23 மே 2022 முதல் 1 சூன் 2022 முடிய நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் [6] ஆடவர் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியின் சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பின்னணி[தொகு]

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் சக்திவேல் - சங்கரேஸ்வரி தம்பதியரின் மகன் மாரீஸ்வரன் ஆவார். மாரியப்பன் 9ம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் சேர்ந்து படித்து வந்தார். இவர் தமிழ்நாடு வளைதடி பந்தாட்டத்தில் கடுமையாகப் பயிற்சி பெற்றார். இவர் தமிழ்நாடு அணியின் இளையோர் அணியில் வளைதடி பந்த்தாட்டத்தில் 5 முறை இடம் பெற்றுள்ளார். தற்போது இவர், விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் இந்திய கணக்கு தணிக்கை துறையில் பணியாற்றி வருகிறார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._மாரீஸ்வரன்&oldid=3430217" இலிருந்து மீள்விக்கப்பட்டது