ச. நா. போசு அடிப்படை அறிவியல் தேசிய மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. நா. போசு தேசிய அடிப்படை அறிவியல் மையம்
குறிக்கோளுரைविज्ञानेन परिपश्यन्ति धीरा: (சமசுகிருதம்)
வகைதன்னாட்சி, ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1986; 38 ஆண்டுகளுக்கு முன்னர் (1986)
பணிப்பாளர்பேரா. சமித் குமார் ராய்[1]
மாணவர்கள்170
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புஅறிவியல் தொழில்நுட்பத் துறை, இந்தியா
இணையதளம்www.bose.res.in

ச. நா. போசு அடிப்படை அறிவியல் தேசிய மையம் (S. N. Bose National Centre for Basic Sciences) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் கணித அறிவியலின் அடிப்படை ஆய்விற்கு அர்ப்பணிக்கப்பட்ட தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உப்பு ஏரி பகுதியில் அமைந்துள்ளது . இந்த நிறுவனத்திற்கு இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போசின் நினைவாகப் பெயரிடப்பட்டு 1986இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநராக சஞ்சல் குமார் மஜும்தார் ஆவார்.[2]

இது ஒரு ஆராய்ச்சி நிறுவனம் என்பதால், முக்கியமாக முனைவர் ஆய்வுத் திட்டம் இங்கே மேற்கொள்ளப்படுகிறது. 2001 முதல் ஒருங்கிணைந்த முனைவர் பட்டத்திற்கானத் (முதுநிலை + முனைவர்) திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டு வருடப் படிப்பை முடித்தவர்களுக்கு முதுநிலை அறிவியல் பட்டம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. முன்னர், இந்த பட்டத்தை மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வழங்கியது. இந்த நிறுவனத்தின் மாணவர்கள் தங்கள் முனைவர் பட்டத்தினை ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், மேற்குவங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அல்லது மாணவர்களை அனுமதிக்கும் வேறு எந்த பல்கலைக்கழகத்திற்கும் ஆய்வறிக்கையினை சமர்பித்து பட்டம் பெறலாம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Director".
  2. "Chanchal Kumar Majumdar (1938–2000) – An obituary" (PDF). Current Science. July 2000. Archived from the original (PDF) on 2006-07-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  3. "Rules and Regulations for Ph.D. Programmes and Research Fellowships" (PDF). S N Bose National Centre for Basic Sciences. January 2008. Archived from the original (PDF) on 2008-10-09. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.

வெளி இணைப்புகள்[தொகு]