உள்ளடக்கத்துக்குச் செல்

ச. செல்லபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. செல்லப்பாண்டியன்

ச. செல்லப்பாண்டியன் (S. Chellapandian) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். திருநெல்வேலி மாவட்டம் பம்மல்புரத்தினைச் சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் பள்ளிக் கல்வியினையும், திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பட்டப் படிப்பும், திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டமும் பெற்றார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேரன்மாதேவி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[1] 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் பொட்டியிட்டு தமிழக சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] இவர் சென்னை மாகாணத்தின் சட்டப்பேரவையின் சபாநாயகராக 1962 முதல் 1967 வரை பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  3. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  4. Radhakrishnan, K. S. (2021-09-11). "Nimira Vaikkum Nellai". Pustaka Digital Media. Retrieved 2022-07-04.
  5. "தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-15. Retrieved 2022-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._செல்லபாண்டியன்&oldid=3967874" இலிருந்து மீள்விக்கப்பட்டது