சோர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோர்யா
சோர்யாவின் கற்பனை ஓவியம், 2013
வேறு பெயர்கள்சோரியா, சார்யா, சாரா, சோர்சா, சோரானித்சா, சோரியுசுகா
சகோதரன்/சகோதரிசூரியன், சந்திரன், சுவேதா

சோர்யா (Zorya) அல்லது சோரியா, சார்யா, சாரா, சோர்சா, சோரானித்சா, சோரியுசுகா என்பது இசுலாவிக் நாட்டுப்புறக் கதைகளில் தோன்றும் விடியலின் பெண் உருவம் அல்லது தெய்வம். பாரம்பரியத்தைப் பொறுத்து, இவள் "சிவப்பு கன்னி" அல்லது ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஒரு தனி நபராக தோன்றுகிறாள். சோரியா இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் காணப்படும் கீவ்சோச் என்ற தேவதையுடன் சொற்பிறப்பியல் ரீதியாக தொடர்பில்லாதவள் என்றாலும், இவள் கீவ்சோச்சுடன் பெரும்பாலான குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். சோரியா பெரும்பாலும் சூரியன், சந்திரன் சகோதரியாக சித்தரிக்கப்படுகிறாள். சில நேரங்களில் விடியலில் தோன்றும் வெள்ளி (கோள்) எனவும் அடையாளம் காணப்டுகிறாள். [1] சூரியனின் அரண்மனையில் வசிக்கும் இவள் அவனுடைய வெள்ளைக் குதிரைகளைக் காக்கிறாள். காலையில் அவனுக்காக வாயிலைத் திறக்கிறாள். இதனால் சூரியன் வானத்தின் வழியாகப் பயணம் செய்ய முடியும்.[2]}} மேலும் இவள் ஒரு கன்னியாக விவரிக்கப்படுகிறாள்.[3][4]

சோரியா வழிபாட்டு முறை இசுலாவிக் நாட்டுப்புறக் கதைகளில் மட்டுமே தோன்றினாலும், அதன் வேர்கள் இந்தோ-ஐரோப்பிய பழங்காலத்திற்குச் செல்கின்றன. மேலும் கீவ்சோச் என்ற தெய்வத்துடன் பெரும்பாலான குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்கிறாள்.[5] சோரியா , புனித ஜார்ஜ் , நிக்கலசு போன்றவர்களுடன் விடியலின் பண்புகளை பெரும்பாலான தெய்வங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். தெய்வீக இரட்டையர்களான புனித ஜார்ஜ் மற்றும் புனிதநிக்கலசு ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறாள்.[6] சிவப்பு, தங்கம், மஞ்சள், ரோசா போன்ற நிறங்களுடனும் ஒப்பிடப்படுகிறாள்.[3][7] இவள் கடலில் உள்ள ஒரு மர்மமான தீவாக, அலையுடன் தோன்றி மறையும் திறன் கொண்டதாக விவரிக்கப்பட்டுள்ள புயான் தீவில் வசிப்பதாகவும் கருதப்படுகிறாள்[8][3]. மேலும் இவள் சூரியனுக்கான அவனுடைய அரண்மனைக் கதவைத் திறப்பதாகவும்[9][3] ஒரு தங்கப் படகையும் ஒரு வெள்ளி துடுப்பையும் வைத்திருப்பதாவும் நம்புகின்றனர்

9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு ஒளிரும் சின்னம்

பால்டிக் புராணம்[தொகு]

அறிஞர்களின் கூற்றுப்பரிசில் படி, லித்துவேனியா நாட்டுப்புறக் கதைகள் வாகரைன் மற்றும் ஆசுரைன் போன்ற ஒளிரும் தெய்வங்களுக்கு ஒரே மாதிரியான இரட்டை வேடத்தை வழங்குகின்றனref>Razauskas, Dainius (2011). "Iš baltų mitinio vaizdyno juodraščių: Aušrinė (ir Vakarinė)" (in lt). Liaudies kultūra. https://www.lituanistika.lt/content/32737. </ref>[10] மாலை நட்சத்திரமான வாகைரைன், சூரிய தெய்வமான சவுலேக்கு படுக்கையை உருவாக்குவதாகவும், காலை நட்சத்திரமான ஆசுரைன் நெருப்பை உருவாக்கி மற்றொரு நாள் பயணத்திற்கு தயாவதாகவும் கதை உள்ளது.[11] மற்ற கணக்குகளில், ஆசிரைன், வாகைரைன் ஆகியோர் சூரியன் மற்றும் சந்திரன் [12][13] ஆகியோரின் மகள்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் தாயின் அரண்மனை மற்றும் குதிரைகளை பராமரிப்பதாகவும் கதை கூறுகிறது.[14]

உருசிய பாரம்பரியம்[தொகு]

உருசிய பாரம்பரியத்தில், இவர்கள் பெரும்பாலும் இரண்டு கன்னி சகோதரிகளாகத் தோன்றுகிறார்கள்: சோரியா (காலை) உட்ரென்னியாயா விடியலின் தெய்வமாகவும், சோரியா வெச்செர்னியாயா அந்திப்பொழுதின் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் சூரியனின் தங்க சிம்மாசனத்தின் வெவ்வேறு பக்கத்தில் நிற்பதாகவும், காலையில் சூரியன் புறப்பப்பதாகவும், இரவில் சூரியன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பும்போது மாலை சோரியா வாயிலை மூடுவதாகவும் கூறப்படுகிறது.[9][3] சோரியாவின் தலைமையகம் புயான் தீவில் அமைந்திருந்தது.[15]

நல்ல அறுவடைகள் மற்றும் ஆரோக்கியத்திற்காக இவள் சார்யா என்றும் பிரார்த்தனை செய்யப்டுகிறாள்.[16] சார்யா ஒரு பாதுகாவலராகவும் கனவுகள் மற்றும் தூக்கமின்மையை அகறும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

இசுலாவிக் பாரம்பரியம்[தொகு]

தேவி சாரியா (மாற்றாக சோரி என்று அழைக்கப்படும் மூன்று தெய்வங்கள்) நோய்க்கு எதிராக போர்புரிபவளாக கருதப்படுகிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Graves 1987.
  2. Peroš, Zrinka; Ivon, Katarina; Bacalja, Robert (2007). "More u pričama Ivane Brlić-Mažuranić". Magistra Iadertina 2. doi:10.15291/magistra.880. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Zarubin 1971, ப. 70–76.
  4. Toporkov 1995, ப. 189.
  5. Váňa 1990, ப. 61.
  6. Sańko 2018, ப. 15–40.
  7. Afanasyev 1865, ப. 81–85, 198.
  8. Shedden-Ralston 1872, ப. 376.
  9. 9.0 9.1 Graves 1987, ப. 290–291.
  10. Zaroff, Roman (5 May 2015). "Organized Pagan Cult in Kievan Rus'. The Invention of Foreign Elite or Evolution of Local Tradition?Organizirani poganski kult v kijevski državi. Iznajdba tuje elite ali razvoj krajevnega izročila?". Studia mythologica Slavica 2: 47. doi:10.3986/sms.v2i0.1844. 
  11. Straižys, Vytautas; Klimka, Libertas (1997). "The Cosmology of the Ancient Balts". Journal for the History of Astronomy 28 (22): S57–S81. doi:10.1177/002182869702802207. Bibcode: 1997JHAS...28...57S. 
  12. Razauskas, Dainius (2011). "Dievo vaikaitis: žmogaus vieta lietuvių kosmologijoje" (in lt). Tautosakos darbai. https://www.lituanistika.lt/content/33049. 
  13. Laurinkienė, Nijolė (2019). "Dangiškųjų vestuvių mitas" (in lt). Liaudies kultūra. https://www.lituanistika.lt/content/81896. 
  14. Andrews, Tamra (2000). Dictionary of Nature Myths: Legends of the Earth, Sea, and Sky. Oxford University Press. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-513677-7. https://archive.org/details/dictionaryofnatu0000andr. 
  15. Shedden-Ralston 1872, ப. 375.
  16. Shedden-Ralston 1872, ப. 349–350.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோர்யா&oldid=3849785" இலிருந்து மீள்விக்கப்பட்டது