சோரத் ராய் தியாச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  

சோரத் ராய் தியாச் ( சிந்தி மொழி: سورٺ راءِ ڏياچ‎ ) பாகிஸ்தானின் சிந்துவில் சொல்லப்பட்டு வரும் பாரம்பரிய வரலாற்று காதல் கதைகளில் ஒன்றாகும். இந்தக் கதை ஷா ஜோ ரிசாலோவிலும் இருக்கிறது மேலும் பாகிஸ்தானின் சிந்துவில் சொல்லப்படும் பிரபலமான ஏழு சோகக் காதல்களின் ஒரு காதல் கதையாகும். மற்ற ஆறு கதைகளாவன உமர் மார்வி, சசுய் புன்ஹுன், சோஹ்னி மெஹர், லிலன் சானேசர், நூரி ஜாம் தமாச்சி மற்றும் மொமல் ரானோ பொதுவாக சிந்துவின் ஏழு ராணிகள் அல்லது ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்று அழைக்கப்படுகின்றன.

கதைச்சுருக்கம்[தொகு]

சோரத், தற்போது குஜராத்தில் உள்ள கிர்னார், ஜூனாகத் பகுதியைச் சேர்ந்த ராஜா தாஜின் அல்லது அரசர் ராய் தியாச் அல்லது ரோர் குமார் [1] ன் ராணி ஆவார், தனது கணவனின் அன்பிற்காக தன்னையே தியாகம் செய்தார். தியாச் அலைந்து திரிந்த அனாதை சிறுவனான

பிஜால்க்குத் தன் தலையை பரிசாகக் கொடுத்தையடுத்து சோரத்தும் அவனைப் பின்தொடர்ந்து இறந்தவர்களின் உலகத்திற்குச் சென்றாள்,  அனாதை சிறுவனின் உள்ளத்தை உருக்கும் பாடல்களை கேட்ட தியாச், மிகவும் மனம் மகிழ்ந்து, அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, அவனோ அவனுடைய தலையைக் கேட்டான். கருணையும் தாராளமும் கொண்ட அரசனும் அடுத்த கணமே அதைக் கொடுத்தான்.

அன்பு கணவனை இழந்த  சோரத்தின் தலையில் அந்தப் பாடல்களை தவிர வேறு எதுவுமே ஒலிக்கவில்லை. அதைத்தொடர்ந்து  அவளும் தனிமையான வாழ்க்கையிலிருந்தும், அவனைப் பிரிந்த வலியிலிருந்தும் அவனை போலவே தனது தலையை துண்டித்துக்கொண்டு விடைபெற்றாள். [2] [3]

சூர் சோரத் ( சிந்தி : سر سورٺ ) என்பது ஷா ஜோ ரிசாலோவின் 30 சூராக்களில் (அத்தியாயங்கள்) ஒன்றாகும், அதில் ராய் தியாச் மற்றும் சோரத்தின் நன்கு அறியப்பட்ட கதையின் இணைப்பு புள்ளிகள் விவரிக்கப்பட்டுள்ளது . இந்த சூரின் உள்ளடக்கங்கள், பிரிவு வாரியாக, கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

 1. பிஜால் ராய் தியாச்சிடம் வந்து தலையைக் கேட்கிறார் - அவருக்கு பல்வேறு வகையான விலைமதிப்பற்ற பரிசுகள் வழங்கப்படுகின்றன, ஆனால் அவர் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருக்கிறார்.
 2. பிஜால் ஆறு இரவுகள் தொடர்ச்சியாகப் பாடுகிறார் - அவருக்கு அதிக பரிசுகள் வழங்கப்படுகின்றன.
 3. பிஜாலின் இசையின் விளைவுகள்.
 4. ராய் தியாச் தனது தலையை துண்டித்து பிஜலுக்கு கொடுக்கிறார்-சோரத் இறந்த அவரது வீட்டின் உறுப்பினர்களின் துக்கம்.

மற்ற கலை வடிவங்களில்    [தொகு]

 • இந்திய சிந்தித் திரைப்படமான ராய் தியாச், இந்த நாட்டுப்புறக் கதையின் தழுவலாக, 1958 ஆம் ஆண்டு வெளியாகியது . இப்படம் ஜேபி லுல்லா இயக்கி லால்வானி தயாரித்து வெளியிடப்பட்டது . இது ராம் பஞ்வானி என்பவரால் எழுதப்பட்டது மற்றும் லால்வானி, சாந்தி ராம்சந்தனி மற்றும் பூடோ அத்வானி ஆகியோர் நடித்தனர். படத்தின் இசை, பூலோ சி. ராணி யால் அமைக்கப்பட்டது. இத்திரைப்படம் இசையின் காரணமாகவே பெரிதும் அறியப்படுகிறது. [4]
 • பஞ்வானி சிந்தி மொழியில் பிஜல் ராய் தியாச் என்ற நாடகத்தையும் எழுதினார். [5]
 • சதி சோரத், காமினி பாட்டியா மற்றும் அரவிந்த் ஜோஷி நடிப்பில் 1978 இல் வெளியான நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்திய குஜராத்தி மொழி நாடகத் திரைப்படம். [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. MUSHTAQ ALI SHAH (2014). Mystic Melodies: Shah Abdul Latif Bhittai. Bloomington,IN,USA: Author House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781496996060.
 2. Dr.Nabi Bux Khan Baloach. Popular Folk Stories:Sorath Rai Diyach.
 3. Menka Shivdasani. "Sorath Rai Diyach". Institute of Sindhology,Jaipur. Archived from the original on 2017-04-29. பார்க்கப்பட்ட நாள் 2023-02-16.
 4. 4.0 4.1 Ashish Rajadhyaksha (2014). Encyclopedia of Indian Cinema. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-94325-7.
 5. "Drama - Professor Ram Panjwani". rampanjwani.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரத்_ராய்_தியாச்&oldid=3676078" இலிருந்து மீள்விக்கப்பட்டது