சிந்துவின் ஏழு ராணிகள்
ஏழு ராணிகள் (சிந்தி:ست سورميون, உச்சரிப்பு (சட்-எ சூர்-மியூன்); அதாவது ஏழு வீரப் பெண்கள் ) என்பது சிந்திக் கவிஞர் ஷா அப்துல் லத்தீப் பித்தாய் [1]. அவரது கவிதை புத்தகமான ஷாவின் கவிதை இதழ்கள் (ஷா ஜோ ரிசாலோ) வில் வரும் ஏழு பெண் கதாபாத்திரங்களைப் பொதுவாகக் குறிப்பிடப்படும் பெயர்கள் ஆகும் . [2] அவை:
- மாருய் (مارئي)
- மூமல் (مومل)
- சசுய் (سسئي)
- நூரி (نوري)
- சுஹானி (سوہنی)
- லிலன் (ليلا)
- சோரத் (سورٹھ).
இந்த ஏழு [3] பெண் கதாபாத்திரங்களை, சிந்துவின் வரலாற்றில் அவர்களின் துணிச்சல், ஆர்வம், விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் பாத்திர வலிமை ஆகியவற்றிற்றின் கலாச்சார சின்னங்களை குறிப்பிட்டு தனது கவிதை செய்தியை தெரிவிப்பதற்காக வரலாற்றில் இருந்து கவிஞர் தேர்ந்தெடுத்துள்ளார்.
மாருயியின் கதாபாத்திரம் சிந்துவின் மக்கள், மற்றும் அந்நிலத்தின் மீதான அவளது காதல், அவளுடைய மரபுகள் மீதான அவளது அர்ப்பணிப்பு, ஒரு கொடுங்கோல் மன்னன் உமர் (عمر) அல்லது சிலர் சொல்வது போல் (அமர்—امر) க்கு எதிரான அவள் நிலைப்பாடு என்பவைகளை சித்தரிக்கிறது. [4] மூமலின் கதாபாத்திரம் ஒரு உணர்ச்சிமிக்க ஆன்மாவின் உருவத்தை சித்தரிக்கிறது, அவளது காதலனான ரானோ (راڻو) மீதான அன்பினால் அவளது ஆன்மா நிரம்பி வழிகிறது. காதலினால் மட்டுமல்லாமல் பிரிவினை மற்றும் நிராகரிப்பு என உணர்ச்சிக்கொந்தளிப்பில் தவிக்கிறது ஆனால் விட்டுக்கொடுப்பதில்லை . [5] சசுயி ஒரு தைரியமான பெண்ணாக உருவகம் கொள்கிறாள்.பெண்மணி, அவர் தனது காதலனான புன்ஹூனை (پنهون) கண்டுபிடிக்க கடுமையான மலைப்பாதைகளில் பயணத்தை மேற்கொள்கிறார். [6] நூரி ஒரு மீனவப் பெண்ணாவாள், அவர் ராஜா தமாச்சியை (تماچي) மயக்கி, சிந்தி இலக்கியத்தில் [7] இதர காதல் கதாபாத்திரங்களான மூமல் மற்றும் சுஹானி போன்ற ஒருவராக மாறுகிறார். சுஹானிஒரு துணிச்சலான ஆன்மா, அவள் காதலனான மெஹரை (ميهار) சந்திப்பதற்காக, சிந்து நதியின் அதிவேக அலைகளைக் கண்டு சிறிதும் பயப்படாதவளாக, ஆற்றின் தொலைதூரக் கரையில் தன் காதலனை தினமும் சந்தித்துக்கொண்டே இருப்பாள், ஆனால் ஒரு இரவு அதே நதி அலைகளுக்கு பலியாகி இறந்துவிடுகிறாள். [8] வெறுப்பூட்டுகிற ஒரு விலையுயர்ந்த கழுத்தணி காரணமாக லிலன் தனது ராஜா (கணவன்) சனேசரை இழக்கிறாள், மேலும் தன் அந்தஸ்தையும் குணத்தையும் மீண்டும் பெற இயலாமல், தாங்க முடியாத பிரிவினையின் வேதனையை அனுபவிக்கிறாள்; [9] சோரத் ஒரு அன்பான ஆன்மாவாக இருந்தாலும், அவளுடைய காதலனின் மீது பேரார்வமும் அக்கறையும் நிறைந்தவள். [10]
ஷா அப்துல் லத்தீஃப் பொதுவாக ஷாவின் கவிதை இதழ்கள் என்று அழைக்கப்படும் தனது கவிதைப் புத்தகமான கஞ்ச், [11], அவரது கவிதைகளின் மூலம் உலகிற்கு தனது துணிச்சல், ஆர்வம், விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் பாத்திர வலிமை போன்றவைகளை தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது கவிதைகளுக்குப் பின்னால் உள்ள பல நோக்கங்களில், நாட்டின் விளிம்புநிலை மக்களை, குறிப்பாக பெண்களை முன்னிலைப்படுத்துவது என்பதே அவரது முக்கிய விருப்பங்களில் ஒன்றாகும். அதன்படி, சிந்தி நாட்டுப்புறக் கதைகளின் இந்த ஏழு பெண்கள் அல்லது ஏழு ராணிகளை அவர் தனது கதைகளில் கதாநாயகிகளாகத் தேர்ந்தெடுத்தார். இந்த துயரமான காதல் கதாநாயகிகள் உமர் மாருய், மோமல் ரானோ, சுஹானி மெஹர், லிலன் சானேசர், நூரி ஜாம் தமாச்சி, சாசுய் புன்குன் மற்றும் சோரத் ராய் தியாச் .
இந்த வீரப் பெண்கள் பாகிஸ்தானில் மற்றும் இந்தியாவிலும் உள்ள குறிப்பாக சிந்தியில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியங்களிலும் ( சிந்தி, உருது, பலூச்சி, பாஷ்டோ, சிரைக்கி, பஞ்சாபி ) குறிப்பிடத்தகுந்த இலக்கிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக மூமல் மற்றும் சுஹானி ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த நாட்டுப்புறக் கதைகளின் உரைகளிலிருந்து, குறிப்பாக லத்தீப்பின் கவிதைகளிலிருந்து, இந்த பெண்களின் பாத்திரம் ஆண்களின் பாத்திரமான அவர்களின் சகாக்களை மிகுந்த ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றும். லத்தீப்பின் கவிதைகளில் உமர்-மார்வி கதாபாத்திரங்களை மட்டும் அலசினால், உமரின் பாத்திரத்திற்கு குறைவான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதையும் , பெரும்பாலான கதை/கதைகள் சிந்துவின் தென்கிழக்கு பகுதியில் மன்னன் உமரால் கடத்தப்பட்டதன் விளைவாக மார்வி அடையும் சிரமங்களைக் குறிக்கிறது. மூமல்-ரானோவில், மூமலின் பாத்திரம் ரானோவின் பாத்திரம் உட்பட எல்லாவற்றையும் மிஞ்சுகிறது. சசுயி-புன்ஹூன் கவிதைகளில் முக்கியமாக, சசுயி தன்னை விட்டுச் சென்ற தனது அன்பான கணவனைக் கண்டுபிடிக்கும் போராட்டத்தின் கதையாகும். இந்த கதையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே புன்ஹூனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நூரி-ஜாம் தமாச்சி கவிதைகளில் முக்கியமாக நூரியின் சூழலில் இருந்து வரும் காதல் கதையாகும். தமாச்சி நூரியின் முன்னோக்கை நிரூபிக்க உதவும் ஒரு ஆதாரம் போன்றது. சுஹானி-மெஹர் கவிதைகளில் மீண்டும் மெஹரை சந்திக்க சுஹானியின் கவலை மற்றும் பிரச்சனையின் கதை. மெஹர் ஒரு பொருட்டாகவே இல்லை. லிலன்-சனேசரில், மீண்டும் கதாநாயகன் லிலன் தான். இருப்பினும், சோரத்-ராய் தியாச்சில், சோரத், மேற்கூறிய கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் போலல்லாமல், கதையின் ஆவியில் ஆதிக்கம் செலுத்துகிறார், பொருள் (உரையில் அவருக்கு வழங்கப்பட்ட இடம்) அல்ல.
இவ்வாறு, இந்த ஏழு வீரப் பெண்களின் ஒவ்வொரு கதையும், சிற்சில மாற்றங்களுடன் எதாவது ஒரு வழியில் , பழைய ஒன்றுபட்ட இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தானின் பிராந்தியங்களில் வாழும் மக்களின் பரிணாம செயல்முறையின் கலாச்சார சூழல் மற்றும் உட்பொருளுடன் தொடர்புடையதாக உள்ளது. லுப்னா ஜஹாங்கீர், அத்தியா தாவூத் [12] [13] ன் வழிகாட்டுதலின் கீழ் ஓஷன் ஆர்ட் கண்காட்சியில் ஷா அப்துல் லத்தீப்பின் ஏழு ராணிகளையும் ஓவியமாக வரைந்து, காட்சிப்படுத்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஷா அப்துல் லத்தீப் பித்தாய்".
- ↑ "ஷா ஜோ ரிசாலோ".
- ↑ "Sindhi Folk Tales in English | Sindhi Sangat | Sindhi book | Sindhi Community". www.sindhisangat.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
- ↑ "உமர் மாருய்".
- ↑ "மோமல் ரானோ".
- ↑ "சாசுய் புன்குன்".
- ↑ "நூரி ஜாம் தமாச்சி".
- ↑ "சுஹானி மெஹர்".
- ↑ "லிலன் சானேசர்".
- ↑ "சோரத் ராய் தியாச்".
- ↑ "ஷா ஜோ ரிசாலோ".
- ↑ "Story of seven queens". பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
- ↑ "Lubna Jehangir celebrates strong women on canvas with her strokes". 2019-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.