சோயாரபாய்
சோயாரபாய் (Sant Soyarabai) 14 ஆம் நூற்றாண்டு மகாராட்டிராவில் உள்ள மஹர் சாதியைச் சேர்ந்த ஒரு துறவி ஆவார். இவர் தனது கணவரும் கிருஷ்ண பக்தருமான சோகாமேளரின் சீடராக அறியப்படுகிறார்.[1] [2]
வரலாறு
[தொகு]சோயாரபாய் தனது தாய் மொழியான மராத்தி மொழியில் இலக்கியங்களை வடிவமைத்தார். இவர் நிறைய எழுதினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது, இவரின் 62 படைப்புகள் மட்டுமே அறியப்படுகின்றன. இவரது அபங்கத்தில், தன்னை சோகாமேளரின் மஹரி என்று குறிப்பிடுகிறார். கடவுள் தலித்துகளை மறந்துவிட்டு, அவர்களின் வாழ்க்கையை மோசமாக்குகிறார் என்று குற்றம் சாட்டுகிறார். இவருடைய பாடல்களில் மிக அடிப்படையான வசனங்கள் கடவுளுக்குக் கொடுக்கும் எளிய உணவைப் பற்றியதாக உள்ளது. இவரது கவிதைகள் கடவுள் மீதான இவரது பக்தியை விவரிக்கின்றன. மேலும், தீண்டாமைக்கு எதிரான இவரது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.[3]
"வெளியில் காணப்படும் உடல் மட்டுமே தூய்மையற்றதாகவோ அல்லது மாசுபடுத்தப்பட்டதாகவோ இருக்கும், ஆனால் அனைவரின் உள்ளத்தில் இருக்கும் ஆன்மா எப்போதும் தூய்மையானது, உடல் தூய்மையற்றதாகப் பிறக்கிறது, அதனால் உடலில் தூய்மையாக இருப்பதாக ஒருவர் எப்படிக் கூற முடியும்? உடலில் அதிக மாசு உள்ளது. உள்ளத்தில் இருக்கும் ஆன்மா அதைத் தொடவில்லை." என்று சோயாராபாய் நம்பினார்,
சோயாராபாய் தனது கணவருடன் ஆண்டுதோறும் பண்டரிபுரம் யாத்திரை மேற்கொண்டார். அப்போது, இவர்களும் இவரது இனத்தைச் சேர்ந்தவர்களும் மரபுவழி பிராமணர்களால் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் இவர்கள் நம்பிக்கையையும் மன அமைதியையும் இழக்கவில்லை. பின்னர், இவரது கணவரின் பக்தி தொண்டினால் ஈர்க்கப்பட்டு இவரது இனத்தார்கள் அனைவரும் இறையருள் பெற்றனர் என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stewart-Wallace, editorial advisers Swami Ghananda, Sir John (1979). Women saints, east & west (1. U.S. ed.). Hollywood, Calif.: Vedanta. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0874810361.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Zelliot, Eleanor (2008). From Stigma to Assertion: Untouchability, Identity and Politics in Early and Modern India. Copenhagen: Museum Tusculanum Press. pp. 76–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8763507752.
- ↑ From Stigma to Assertion : Untouchability, Identity & Politics in Early & Modern India. Copenhagen: Museum Tusculanum Press. 2008. pp. 81–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8763507752.