உள்ளடக்கத்துக்குச் செல்

சோட்டா சகீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோட்டா சகீல்
பிறப்புமொகமது சகீல் பாபு மியான் சேக்
31 திசம்பர் 1955 (1955-12-31) (அகவை 68)
மும்பை மகாராட்டிரம், இந்தியா
பணிநிழல் உலக தாதா
பணியகம்டி-கம்பெனி

சோட்டா சகீல் (Chhota Shakeel) (பிறப்பு: டிசம்பர் 31, 1955) என்பவர் தெற்காசியாவை தளமாகக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஓர் குற்றவாளியாவர். போதைப்பொருள் வியாபாரியும் மற்றும் தேடப்படும் பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிம் என்பவரால் நிறுவப்பட்டு கட்டுப்படுத்தப்படும் மும்பை நிழல் உலகத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட டி-கம்பெனி [1] என்ற குற்றக் குழுவில் உயர் பதவியில் இருந்தவராவார்.[2][3]

இவர் 1988 ஆம் ஆண்டில் டி-கம்பெனியில் சேர்ந்தார். மேலும் குழுவின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கு இவர் பொறுப்பேற்றார். 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் சகீல் இந்தியாவில் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவரானார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்க அரசாலும் இவர் தேடப்பட்டு வந்தவர்.[4]

இறப்பு பற்றிய வதந்திகள்

[தொகு]

டிசம்பர் 2017 இல், சகீல் 7 ஜனவரி 2017 அன்று பாக்கித்தானின் கராச்சியில் இறந்துவிட்டதாக தாவூத் என்று கூறிக் கொண்ட ஒருவரின் பேச்சு வெளியானதை அடுத்து பல ஆதாரங்கள் மூலம் சகீல் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது [5] மற்றொரு ஆதாரம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெயரிடப்படாத இந்திய உளவுத்துறை அதிகாரியை மேற்கோள் காட்டி, சகீல் தஜிகிஸ்தானின் துசான்பேயில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்டது. [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dawood 4th 'most wanted' criminal on Forbes list" பரணிடப்பட்டது 29 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம். The Times of India. (29 April 2008). Retrieved 16 April 2012.
  2. Ojha, Arvind (20 August 2018). "Exclusive: Chhota Shakeel is alive, letter sent to Interpol fake". India Today. https://www.indiatoday.in/mail-today/story/exclusive-chhota-shakeel-is-alive-letter-sent-to-interpol-fake-1216116-2018-04-20. 
  3. Busch, Gary K. (31 December 2018). "Organised Crime and International Politics in Asia". Indian Defence Review.
  4. "SHAKEEL, Chhota".
  5. "Exclusive: Chhota Shakeel is alive, letter sent to Interpol fake". https://www.indiatoday.in/mail-today/story/exclusive-chhota-shakeel-is-alive-letter-sent-to-interpol-fake-1216116-2018-04-20. 
  6. "Mumbai's Dreaded Underworld Secret". https://www.opednews.com/articles/Mumbai-s-Dreaded-Underworl-by-Rob-Williamson-Gangsters_Secret-Empire_Secret-Ops-181212-603.html. 

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டா_சகீல்&oldid=3871656" இலிருந்து மீள்விக்கப்பட்டது