சொலெடாட் அல்வியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொலெடாட் அல்வியர்
SolAlvear.jpg
பிறப்புசெப்டம்பர் 17, 1950 (1950-09-17) (அகவை 69)
சான்டியேகோ, சிலி
இருப்பிடம்சான்டியேகோ, சிலி

மரியா சொலெடாட் அல்வியர் வாலென்சுயெலா (Maria Soledad Alvear Valenzuela) (சான் டியேகோ செப்டம்பர் 17, 1950) சிலி நாட்டு வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சிலி கிறித்தவ சனநாயக கட்சியின் சார்பாக கிழக்கு சான்டியேகோ மாநகர வலயத்திலிருந்து மக்களவை (செனட்) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிறித்தவ சனநாயகக் கட்சியின் தலைவராக 2006-08 ஆண்டுகளில் இருந்தவர். பாட்ரிசியோ ஆல்வின், எடுயார்டோ பிரை ரூசு டாக்லெ மற்றும் ரிகார்டோ லாகோசு அரசுகளில் அமைச்சராகப் பணி புரிந்தவர். லகோசு அரசில் சிலி நாட்டு வ,லாற்றிலேயே முதன்முறையாக ஓர் பெண் வெளியுறவு அமைச்சராக பொறுப்பாற்றினார். 2005ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தன் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். முன்னதாக ஆல்வின் அரசில் மகளிர்நல அமைச்சராகப் பணிபுரிந்தார். எடுயார்டோ ரூசு அரசில் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றி குற்றவியல் சட்டங்களை முற்றிலுமாக காலனியாதிக்கச் சட்டங்களிலிருந்து மாற்றியமைத்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொலெடாட்_அல்வியர்&oldid=1467144" இருந்து மீள்விக்கப்பட்டது