சையாத்ரி அறிவியல் கல்லூரி
முந்தைய பெயர்கள் | அரசு முதல் தர கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1940 |
சார்பு | குவேம்பு பல்கலைக்கழகத் தொகுதிக் கல்லூரி |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
சையாத்ரி அறிவியல் கல்லூரி (Sahyadri Science College) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அரசு நிறுவனம் ஆகும். இக்கல்லூரியானது சிமோகா குவெம்பு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகும்.[1]
முன்னாள் மாணவர்கள்
[தொகு]யு.ஆர்.ஆனந்தமூர்த்தி, பூர்ணச்சந்திர தேச்சசுவி, டி.எச்.சங்கரமூர்த்தி, கே.வி.சுப்பண்ணா மற்றும் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் அடங்குவர். . கே.வி.சுப்பண்ணா, ஒரு சிறந்த நாடக ஆளுமை மற்றும் மகசேசே விருது வென்றவர்.என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
முன்னாள் ஆசிரியர்கள்
[தொகு]பத்மசிறீ கே.எசு. நிசார் அகமது 1967-72 மற்றும் 1975-78 ஆகிய இரண்டு காலகட்டங்களில் கல்லூரியில் கற்பித்தார்.
முனைவர். சிஎன்ஆர் ராவ் கலையரங்கம்
[தொகு]புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் பாரத ரத்னா சிஎன்ஆர் ராவ் தனது இடைநிலைப் படிப்பிற்காக 1947 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை இங்கு பயின்றார்.[3] தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சேவையைப் போற்றும் வகையில், கல்லூரி அவரது பெயரில் ஓர் அரங்கத்தை அர்ப்பணித்தது. 2006 ஆம் ஆண்டில், முனைவர் ராவ் சையாத்ரி அறிவியல் கல்லூரிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் உரையாற்றினார். முனைவர் ராவ் தனது உரையில், அறிவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு மாணவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sahyadri Science College".
- ↑ "Karnataka News : Sahyadri College elated over Dan David Prize for C.N.R. Rao". தி இந்து. 2005-04-06. Archived from the original on 2016-12-21.
- ↑ 3.0 3.1 "Take more interest in scientific research, C.N.R. Rao tells students".