சையத் முகமது சாதுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத் முகமது சாதுல்லா
ছাৰ ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ
புகைப்படம், ஆண்டு 1947
அசாம் மாகாணத்தின் பிரதம அமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 1937 – 11 பிப்ரவரி 1946
முன்னையவர்புதிய பணியிடம்
பின்னவர்கோபிநாத் பர்தலை
உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் & இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு
பதவியில்
9 டிசம்பர் 1946 – 24 சனவரி 1950
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1885-05-21)21 மே 1885
குவாகாத்தி
இறப்பு8 சனவரி 1955(1955-01-08) (அகவை 69)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅசாம் சமவெளி கட்சி (அசாம் ஐக்கிய முஸ்லீம் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கூட்டணி, பின்னர் அகில இந்திய முசுலிம் லீக்குடன் கூட்டணி)
முன்னாள் கல்லூரிகாட்டன் கல்லூரி, குவாகாத்தி
மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
வேலைஅசாம் மாகாணத்தின் முதல் பிரதம அமைச்சர்
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி
விருதுகள்ஆர்டர் ஆஃப் இந்தியப் பேரரசு (1946)

சர் சையத் முகமது சாதுல்லா (Syed Muhammad Saadulla) (21 மே 1885 – 8 சனவரி 1955) பிரித்தானிய இந்தியாவின் அசாம் மாகாணத்தின் முதல் பிரதம அமைச்சராக 1937 முதல் 1946 முடிய பணியாற்றியவர். மேலும் வழக்கறிஞராக இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் மற்றும் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு உறுப்பினராக பணியாற்றியவர். இவர் அசாம் சமவெளி கட்சியின் தலைவராக செயல்பட்டு, அசாம் ஐக்கிய முஸ்லீம் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்தவர். பின்னர் அகில இந்திய முசுலிம் லீக்குடன் கூட்டணி வைத்தார்.

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் அருகில் சையத் முகமது சாதுல்லா

மேற்கோள்கள்[தொகு]

  • C. F. J. Hankinson (ed.), Debretts Baronetage, Knightage and Companionage, 1954, Odhams Press, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_முகமது_சாதுல்லா&oldid=3745740" இலிருந்து மீள்விக்கப்பட்டது