உள்ளடக்கத்துக்குச் செல்

சைபோட்டா சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைபோட்டா சமர்
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 433
இடம் கார்சோரா
முட்டுக்கட்டை. கொரிந்த் மற்றும் கோர்சிரா இரண்டும் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடின
பிரிவினர்
கார்சோரா,
ஏதென்ஸ்
கொரிந்து
தளபதிகள், தலைவர்கள்
மைசியாட்ஸ்,
ஐசிமிட்ஸ்,
யூரிபாட்டஸ்,
லாசெடைமோனியஸ்,
டையோடிமஸ்,
புரோடீஸ்
ஜெனோக்லைடஸ்
பலம்
110 கோர்சிரேயன் கப்பல்கள்,
10 ஏதெனியன் கப்பல்கள்
150 கப்பல்கள்
இழப்புகள்
70 கப்பல்கள் அழிக்கப்பட்டன,
1000+ பேர் கைதுசெய்யப்பட்டனர்,
பலர் கொல்லப்பட்டனர்
30 கப்பல்கள் அழிக்கப்பட்டன,
பலர் கொல்லப்பட்டனர்

சைபோட்டா சமர் (Battle of Sybota, பண்டைக் கிரேக்கம்Σύβοτα ) என்பது கிமு 433 இல் கார்சோரா (நவீன கோர்ஃபு ) மற்றும் கொரிந்துக்கு இடையே நடந்த போராகும். துசிடிடீசின் கூற்றுப்படி, அதுவரை கிரேக்க நகர அரசுகளுக்கு இடையே நடந்த மிகப்பெரிய கடற்படைப் போராக இது இருந்தது.[சான்று தேவை] . இது பெலோபொன்னேசியப் போருக்கு உடனடி காரணமாக ஆயிற்று.

வரலாறு[தொகு]

கொரிந்தியனின் செல்வாக்கின் கீழ் இருக்க விரும்பாத பழைய கொரிந்திய குடியேற்றமான கோர்சிராவுடன் கொரிந்து தகராறில் ஈடுபட்டது (பின்னணிக்கு எபிடம்னசின் விவகாரத்தைப் பார்க்கவும்). அந்த நேரத்தில் கிரேக்கத்தில் இரண்டாவது பெரிய கடற்படையைக் கொண்டிருந்த கோர்சிரா, கொரிந்தின் எதிரியான ஏதென்சின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டது (கொரிந்து எசுபார்த்தா கூட்டணியில் இணைந்தது போல). கோர்சிரேயன் கடற்படையை வலுப்படுத்த ஏதென்ஸ் பத்து கப்பல்களை கோர்சிராவுக்கு அனுப்பியது. மேலும் கொரிந்தியர்கள் இவர்களின் தீவில் தரையிறங்க முயற்சிக்கும் வரை ஏதெனியப் படைகள் சண்டையிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரிந்து ஜெனோக்லைட்சின் தலைமையில் கப்பல்களைத் திரட்டி, கோர்சிராவுக்குச் செல்லத் தயாரானது.

கோர்சிராவானது மிசியாட்ஸ், ஐசிமைட்ஸ், யூரிபாட்டஸ் ஆகியோரின் கீழ் கடற்படையை ஒன்றைத் திரட்டினர். அவர்கள் சைபோட்டா தீவுகளை தங்கள் செயல்பாடுகளுக்கான தளமாக மாற்றினர். ஏதெனியன் தளபதிகளான லாசெடைமோனியஸ் ( சிமோனின் மகன்), டியோடிமஸ், புரோடீஸ் ஆகியோர் அவர்களுடன் போர்ப் பயணம் மேற்கொண்டனர். கோர்சிராவிடம் 110 கப்பல்கள் இருந்தன. அதனுடன் ஏதென்சால் வழங்கப்பட்ட 10 கப்பல்களும் கூடுதலாக இருந்தன. கொரிந்திடம் 150 கப்பல்கள் இருந்தன. கொரிந்திய கப்பல்கள் வந்தபோது, கோர்சிரேயர்கள் தங்கள் போர் வியூகத்தை அமைத்தனர். ஏதெனியர்களின் கப்பல்கள் வலதுபுறம் ஒரு படைப்பிரிவாக நின்றன மற்றும் கோர்சிராவின் சொந்த கப்பல்கள் மூன்று படைப்பிரிவுகளாக வரிசையில் நின்றன. கொரிந்திய அணியில் வலதுபுறத்திலும், மெகாரார்கள் மற்றும் அம்பிராசியோட்ஸ் கப்பல்களும், இடதுபுறத்திலும் கொரிந்தியர்களின் கப்பல்களும், மையத்தில் மீதமுள்ள அவர்களின் கூட்டாளிகளுடன் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இரு தரப்பினரும் தங்கள் கப்பல்களில் உள்ள ஹாப்லைட்டுகளுடன், வில்லாளர்கள், ஈட்டி எறிபவர்களுடன் சண்டையிட்டனர், துசிடிடீஸ் "பழைய பாணி" என்று அழைக்கும் விதத்தில் போரிட்டனர். எதிரிகளின் கப்பல்களை மூழ்கடிப்பத்து வீழ்த்துவதற்குப் பதிலாக, இரு தரப்பும் தங்கள் எதிரிகளின் கப்பல்களில் ஏறி கடலில் நிலப் போர் போல போராட முயற்சித்தனர். ஏதெனியன் கப்பல்கள், அவை போர்ப்படை வரிசையில் இருந்தாலும், கொரிந்தியர்கள் தீவில் தரையிறங்க முயற்சிக்காததால், முதலில் போரில் ஈடுபடவில்லை.

இடதுபுறத்தில் இருந்த கோர்சிராவின் கப்பல்கள் கொரிந்திய அணியில் வலதுபுறத்தில் உள்ள கப்பல்களை வழிமறித்து, கடற்கரையில் உள்ள அவர்களின் முகாமுக்குத் துரத்திச் சென்றன, பின்னர் அவை எரிக்கப்பட்டன. இருப்பினும், கொரிந்திய அணியில் இடதுபுறத்தில் உள்ள படைகள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டது. இதனால் ஏதெனியர்கள் தங்கள் கூட்டாளிகளின் உதவிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போரில் ஏதெனியர் தலையிட்ட போதிலும், போரில் கொரிந்தியர்கள் வெற்றி பெற்றனர், மேலும் தோற்கடிக்கப்பட்ட கப்பல்களின் இடிபாடுகளுக்குச் சென்றனர். போர்க் கைதிகளை பிடித்துச் செல்வதை விட தப்பிப்பிழைத்தவர்களைக் கொன்றனர் ( வலதுபக்க அணியினால் தோற்கடிக்கப்பட்ட தங்கள் அணியினரையும் தெரியாமல் கொன்றனர்) . எவ்வாறாயினும், அவர்கள் அனைவரையும் கொல்லவில்லை, பலரை கைதிகளாக பிடித்தனர்.

கோர்சிரேயர்கள் மற்றும் ஏதெனியர்கள் தீவைக் காக்க கோர்சிராவுக்குத் திரும்பிச் சென்றனர். அடுத்த நாள், கொரிந்தியர்கள் கோர்சிராவில் தரையிறங்க முயன்றனர், ஆனால் மேற்கொண்டு புதியதாக வந்த ஏதெனியன் கப்பல்களால் இரண்டாவது போருக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் கொரிந்தியர்கள் மற்றொரு போரினால் ஏற்படும் ஆபத்தினால் முற்றிலும் பின்வாங்கினர். கொரிந்தியர்கள் மற்றும் கோர்சிரேயர்கள் இருவரும் வெற்றிபெற்றதாக கூறிக்கொண்டனர். கொரிந்தியர்கள் முதலில் நடந்த போரில் வெற்றி பெற்றனர். ஆனால் கோர்சிரேயர்கள் தங்கள் தீவில் கொரிந்திய ஆக்கிரமிப்பைத் தடுத்துக்கொண்டனர்.

இந்தப் போருக்குப் பிறகு, ஏதெனியர்களும் கொரிந்தியர்களும் பொடிடேயா சமரில் மீண்டும் போரிட்டனர். இது எசுபார்த்தாவிடமிருந்து முறையான போர் அறிவிக்கப்பட வழிவகுத்தது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபோட்டா_சமர்&oldid=3430739" இலிருந்து மீள்விக்கப்பட்டது