சே மரம்
சே மரம் | |
---|---|
பூத்துக் குலுங்கும் சே மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Soymida febrifuga
|
இருசொற் பெயரீடு | |
Soymida febrifuga (Roxb.) Juss. | |
வேறு பெயர்கள் | |
(தாவர வகைப்பாடு:Swietenia soymida, ) A. Dunc. |
சே மரத்தை (Soymida febrifuga) செம்மரம் என்றும் ரோட்டுசெம்மை மரம் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றனர். ரோட்டுசெம்மை அடர்சிவப்பு நிறம் கொண்டது. இது தழை, பூ, காய் உள்ள மரமாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தில் சே மரம்
[தொகு]சே மரத்தைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சே என் மரப்பெயர் ஒடு மர இயற்றே என்பது தொல்காப்பிய நூற்பா.[1]
- சேங்கொடு (சே மரத்தின் கிளை)
- சேஞ்செதிள் (சே மரத்தில் உரிந்து விழும் பொறுக்குப் பட்டை)
- சேந்தோல் (சே மரத்துக் காயிலுள்ள தோல்)
- சேம்பூ (சே மரத்துப் பூ)
என இச்சொல் புணரும் என்பதை உரையாசிரியர் விளக்கம் தருகிறார்.[2]
சொல் விளக்கம்
[தொகு]- மரம்
- சேயோன், சேதாம்பல் என்னும் சொற்களில் சே என்பது செம்மை நிறத்தை உணர்த்துவதை அறியலாம்.
- சே மரத்தின் வயிரப்பகுதி கருஞ்சிவப்பு நிறம் கொண்டது. இதனால் இதனைச் சே என்றும், செம்மரம் வழங்கினர்.
- எருது
- சே என்னும் சொல் விலங்கில் ஆணினத்தைக் குறிக்கும்
- (சே) பெற்றம் ஆயின் முற்றத்தோன்றாது [3]
- "சேவின் கோடு (எருதின் கொம்பு) என வரும்.
மருத்துவப் பயன்
[தொகு]செம்மரம் லுபியோல், சிடோஸ்டேரோல், மீத்தைல் அங்கோலெனேட் (lupeol, sitosterol, methyl angolenate) ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. செம்மரப் பட்டைகளில் டெட்ராநோர்டிட்ரைபினாய்டு என்ற வேதிப் பொருள் உள்ளது (tetranortriterpenoids). இப்பட்டைகளிலிருந்து பிசின் கிடைக்கிறது. நடுமரத்தில் பெஃப்ரிஃபூஜின், நாரிஜெனின், மைரிசெடின், டைஹைட்ரோமைரிசெடின் (febrifugin, naringenin, myricetin, dihydromyricetin) ஆகியவை உள்ளன. மரத்திலும் பட்டையிலும் டிஆக்சிஆண்டிரோபின் (deoxyandirobin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இலைகளில் குயிர்செடின் (quercetin),மற்றும் நைட்டினோசைட் (nitinoside) என்ற பொருட்கள் உள்ளன[4].
மரப்பட்டைகள் வயிற்றுப்போக்கு நோய்க்கும் காய்ச்சலுக்கும் மருந்தாகவும் பொது டானிக்காகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் எரிவடிச்சாறு (decoctin) வாய்ச்சுத்தம் செய்யும் மருந்து தயாரிக்கவும் (gargles), வஜினல் நோய்த்தொற்றுகள், ருமாட்டிக் மூட்டு வீக்கங்கள், வயிறு சுத்தம் செய்யும் எனிமாட்டா போன்ற மருந்துகள் தயாரிக்கவும் பயன்டுகின்றது.[4]