சேலம் புத்தகத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம் புத்தகத் திருவிழா
2022 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா முகப்பு
நிகழ்நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிகழிடம்மாநகராட்சித் திடல், புதிய பேருந்து நிலையம் அருகில்
அமைவிடம்சேலம், தமிழ் நாடு
நாடுஇந்தியா

சேலம் புத்தகத் திருவிழா (salem book fair) என்பது தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியாகும். இவ்விழாவானது மாவட்ட நிர்வாகமும் பபாசியும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். சென்னை புத்தகக் காட்சியையடுத்து அதிக அளவில் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனையாகின்றன.[1]

2022 ஆம் ஆண்டு[தொகு]

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தொடங்கி[2] நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கிய ரூ.17.50 லட்சம் நிதியுடன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் வழங்கிய நிதி என சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இப்புத்தகத் திருவிழா நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.[3] சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200- எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ரூ.10 முதல் 1000- ரூபாய்க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஆட்சிப்பணி தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.[4] 30.11.2022 தேதியுடன் விழா நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தகத் திருவிழா திசம்பர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[5][6]

சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை திட்டமிட்டன. புத்தகக் கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் சுமார் 200 அரங்குகள் அமைக்கப்பட்டன. சேலம் புத்தகத் திருவிழாவினை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.

2023 ஆம் ஆண்டு[தொகு]

2023 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் முதல் டிசம்பர் 3 ஆம் நாள் வரை சேலம் மாநகராட்சித் திடலில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சேலம் மாவட்ட செய்திக்குறிப்பு" (PDF). சேலம் மாவட்டம். பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
  2. Bureau, The Hindu (2022-11-17). "Salem Book Fair from November 20". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
  3. "Salem Book Fair begins". Times of India. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/salem-book-fair-begins/articleshow/95649386.cms. பார்த்த நாள்: 5 December 2022. 
  4. "சேலத்தில் புத்தகத் திருவிழா தொடங்கியது: 50,000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிப்பு". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/life-style/900991-book-festival-begins-on-salem-lakhs-of-books-on-50-000-titles.html. பார்த்த நாள்: 5 December 2022. 
  5. "சேலம் புத்தகத் திருவிழா: டிச. 4-ம் தேதி வரை நீட்டிப்பு". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/908409-salem-book-festival-extension-till-dec-4th.html. பார்த்த நாள்: 5 December 2022. 
  6. "சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/nov/30/the-salem-book-festival-has-been-extended-to-december-4th-3958637.html. பார்த்த நாள்: 5 December 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_புத்தகத்_திருவிழா&oldid=3832938" இலிருந்து மீள்விக்கப்பட்டது