தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்
சுருக்கம் | பபாசி |
---|---|
வகை | பதிப்பாளர்கள் அமைப்பு |
தலைமையகம் | சென்னை, தமிழ் நாடு |
தலைவர் | சேது சொக்கலிங்கம் |
செயலாளர் | எஸ். கே. முருகன் |
வலைத்தளம் | bapasi |
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், (பபாசி) - (The Bookseller`s and Publishers` Association of South India (BAPASI),[1] சென்னையில் 24 ஆகஸ்டு 1976 அன்று, பி. ஐ பதிப்பகத்தின் உரிமையாளர் மாத்யூ என்பவரால், சில பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பு 489 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
சங்கத்தின் நோக்கம்
[தொகு]புத்தக ஆர்வலர்களின் வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடத்துகிறது.[2][3] இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறது. இச்சங்கம் இதுவரை சென்னையில் 36 ஆண்டுகளும், மதுரையில் 10 ஆண்டுகளும், கோவையில் 5 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தியுள்ளது.
புத்தகத் திருவிழாவில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு, விற்பனை விலையில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.
சர்ச்சைகள்
[தொகு]- 2016 இல் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெயரில் படைப்பாளியொருவருக்கு வழங்கி வந்த விருதினை தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துச் சர்ச்சையானது.[4]
- 2024 ஜனவரியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் முன்னாள் முதல்வரை இழிவுப்படுத்திப் பேசியதாகக் கூறி டிஸ்கவரி புக் பேலஸ் என்ற நிறுவனத்தைப் புத்தகக்காட்சியில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்தது.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.justdial.com/Chennai/The-Booksellers-Publishers-Association-Of-South-India-%3Cnear%3E-Behind-Kamarajar-Arangam-Teynampet-West/044P7036443_BZDET
- ↑ மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; 7 செப்டம்பர் வரை நடக்கிறது
- ↑ மதுரையில் புத்தகத் திருவிழா தொடக்கம்
- ↑ "கலைஞர் பெயரில் ஒரு சர்ச்சை!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/literature/207858-.html. பார்த்த நாள்: 18 January 2025.
- ↑ "டிஸ்கவரி நூல் வெளியீட்டுச் சர்ச்சை". இந்து தமிழ். 12 January 2025.