சேது லெட்சுமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளியின் முகப்பு வாசல்

சேது லெட்சுமிபாய் அரசு மேல்நிலைப்பள்ளியானது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சுசீந்திரம் அருகிலுள்ள ஆசிரமத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகா பள்ளிகூடம் என்னும் பெயரில் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து கோட்டாறு கவிமணி தேசிக விநயகம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு, 1883-ல் முழுமை பெற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியாக மாற்றம் அடைந்தது. அன்றைய தெந்திருவிதாங்கூர் முழுமைக்கும் அரசினர் ஆங்கில உயர்நிலைப்பள்ளியாக இப்பள்ளி மட்டுமே விளங்கியது. இப்பள்ளி பின்னர் இடவசதியைக் கருத்திற் கொண்டு நாகர்கோவில் நீதிமன்றச் சாலையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு இப்போதுள்ள பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் சித்திரைத் திருநாள் பாலராமவர்மாவின் பிரதிநிதியாக இருந்த சேது இலக்குமிபாய் மகாராணியாரின் ஆட்சியில் இக்கட்டிடம் உருவாயிற்று. 28 நவம்பர் 1928 முதல் பாடசாலை இங்கு இயங்கத் தொடங்கியது. பள்ளிக்கு மகாராணியாரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது இப்பள்ளி தமிழக்க் கல்வித்துறையின் ஆளுகைக்குள் சென்றது. தமிழக கல்வித்துறை மேல்நிலைக் கல்வித் திட்ட்த்தை ஆரம்பித்த 1978 ஜுலை மாத்த்திலிருந்து இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் பெற்றுள்ளது

  • தேசியமாணவர்படை
  • நாட்டுநலப்பணித்திட்டம்
பள்ளியின் வலப்புறத் தோற்றம்