சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் (Rashid bin Saeed Al Maktoum) (11 ஜூன் 1912 - 7 அக்டோபர் 1990) ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், இரண்டாம் பிரதமரும், துபாயின் அமீரகத்தின் ஆட்சியாளரும் ஆவார். அவர் 1958 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு இறக்கும்வரை 32 ஆண்டுகள் துபாயை ஆட்சி செய்தார்.[1].

துபாய் கட்டமைப்பு[தொகு]

துபாய் நகரில் உள்ள சிறிய துறைமுகங்கள் மற்றும் நவீன துறைமுக நகரம் மற்றும் வர்த்தக மையமாக மாற்றுவதற்கு ஷேக் ராசித் அல் மக்தூம் பொறுப்பு வகித்தார். துபாயின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர் பணியாற்றினார், எண்ணெய் உற்பத்தியோடு இல்லாமல் துபாயை வர்த்தக ரீதியாக ஒரு பிராந்திய மையமாக ஊக்குவிப்பதற்காக பல பிரதான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழிவகுத்தார்.[2]

முக்கிய திட்டங்கள்[தொகு]

போர்ட் ராசித் (1972 இல் திறக்கப்பட்டது) அல் சிந்தகா சுரங்கப்பாதை (1975 இல் திறக்கப்பட்டது) ஜெபல் அலி துறைமுகம் (1979 இல் திறக்கப்பட்டது) துபாய் உலக வர்த்தக மையம் (கட்டப்பட்டது 1978) துபாய் க்ரீக் (1970 களின் ஆரம்பம்) [6] துபாய் டிரைடாக்ஸ் (1983 இல் திறக்கப்பட்டது)

குடும்பம்[தொகு]

ஷேக் ராசித் அல் மக்தூம் ஷேக் ஹம்தான் பின் ஸயீத் அல் நஹ்யானின் மகள் ஷேக்கா லத்தீபா பின்த் ஹம்தான் அல் நஹ்யான் என்பவரை திருமணம் செய்தார். ஷேக் ராசித்திற்க்கு நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்.

  1. மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் (1943-2006).
  2. ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் (பிறப்பு 1945).
  3. முகமது பின் ராஷித் அல் மக்தூம் (பிறப்பு 1949).
  4. அஹ்மத் பின் ரஷீத் அல் மக்தூம் (பிறப்பு 1950).
  5. மர்யம் பின்த் ரஷீத் அல் மக்தூம்
  6. பாத்திமா பின்த் ரஷீத் அல் மக்தூம்
  7. ஹஸ்ஸா பின்த் ரஷீத் அல் மக்தூம்
  8. மைத்தா பின்த் ரஷீத் அல் மக்தூம்
  9. ஷேக்கா பின்த் ரஷீத் அல் மக்தூம்

மேற்கோள்கள்[தொகு]