அல் சிந்தகா சுரங்கப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிந்தகா சுரங்கப்பாதை
Shindagha Tunnel
Al Shindagha Tunnel East entrance.jpg
அல்சிந்தகா சுரங்கப் பாதையின் கிழக்கு நுழைவாயில்
மேலோட்டம்
வேறு பெயர்(கள்)அமீரகத்தின் நீண்ட சுரங்கப்பாதை
அமைவிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள்25°16′22″N 55°17′42″E / 25.272796°N 55.295048°E / 25.272796; 55.295048
தற்போதைய நிலைஅனைவருக்கும்
செய்பணி
மீள் கட்டுமானம்இல்லை
இயக்குபவர்சாலைகள் மற்றும் போக்குவரத்து நிர்வாகம், துபாய்
Trafficதினசரி 55,000 வாகனங்கள்
தொழினுட்பத் தகவல்கள்
தண்டவாளங்களின் எண்ணிக்கை4 (ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள்)
தொழிற்படும் வேகம்60 கி.மீ/மணி
சுரங்க விடுவெளி5 மீட்டர்கள்

அல் சிந்தகா சுரங்கப்பாதை (Al Shindagha Tunnel) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு பெரிய அமீரகங்களில் இரண்டாவது பெரிய அமீரகமான துபாயில் உள்ள ஒரு சுரங்கப்பாதை ஆகும். 1975 ஆம் ஆண்டு இச்சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது. இரு வழிகளிலும் கிட்டத்தட்ட 55000 பேர் தினசரி பயணிக்கும் இப்பாதை மிகப் பழமையானதும் பரபரப்பானதுமான சுரங்கப்பாதையாகும்[1]. துபாய் தேய்ரா - அல் ராசு பகுதியையும், அல் சிந்தகா ஆகிய இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட நீரோட்ட பகுதியை கடக்கும் ஒரு சுரங்கப்பாதை இதுவாகும்.

அமைப்பு[தொகு]

இந்த சுரங்கப்பாதை ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகளாக, நான்கு பாதைகளைக் கொண்டுள்ளது. 5 மீட்டர் உயரமுள்ள வாகனங்கள் மட்டுமே இதன் வழி செல்ல முடியும். மேலும் இதில் வேகம் 60 கிமீ / மணி அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. [2]

சராசரியாக ஒரு நாளைக்கு 55,000 வாகனங்கள் இதில் பயணிக்கின்றன. துபாய் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இது இயங்கிவருகின்றது.

சுரங்கப்பாதை கட்டப்பட்டு ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டதால் அதற்கு மாற்றாக பல வரிசைகளை கொண்ட நவீன பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. [3]

மேற்கோள்கள்[தொகு]