உள்ளடக்கத்துக்குச் செல்

செல்வர் ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வர் ஆட்சி (timocracy) என்பது அரசாட்சி முறைமைகளில் சொத்து வைத்திருப்போருக்கு மட்டுமே அரசாளும் உரிமை உடைய அரசுமுறை ஆகும். இதன் மீக்கடுமையான வடிவமாக, சமூக, குடியுரிமைகளை முற்றிலும் துறந்து செல்வம் மட்டுமே அதிகாரம் பெறும் நிலையில், இது செல்வக்குழு ஆட்சி (plutocracy) எனப்படுகிறது. செல்வக்குழு ஆட்சியில் பணம் படைத்தோர் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு தங்கள் பணத்தை மேலும் பெருக்க முயல்வர்.

சொற்தோற்றம்

[தொகு]

செல்வர் ஆட்சிக்கான பரவலான ஆங்கிலக் கலைச்சொல் டிமோகிராசி என்பதாகும்.இது கிரேக்க சொற்களான "விலை" அல்லது "மதிப்பு"என்ற பொருளுடைய டிம் (τιμή), என்பதிலிருந்தும், (ஆட்சியில் உள்ள) "ஆள்" என்ற வினைச்சொல் பொருளுடைய -கிராசியா என்பதிலிருந்தும் பெறப்பட்டது.[1]

செல்வராட்சியும் சொத்துக்களும்

[தொகு]

செல்வர் ஆட்சியின் கருத்தை ஒட்டி கி.மு ஆறாம் நூற்றாண்டில் ஏதென்சில் சோலோன் சீராக்கப்பட்ட சிலவர் ஆட்சியை தமது அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தினார். இதுவே வலிந்து செல்வர் ஆட்சியை செயல்படுத்தியதாகத் தெரிந்த முதல் வடிவமாகும். இவரது சோலோனிய அரசியலமைப்பில் மக்கள்தொகையை நான்கு சமூக வகுப்புகளில் பிரித்தார்; அவரவர் சமூக வகுப்பைப் பொறுத்து அரசியல் உரிமைகளும் பொருளாதார பொறுப்புகளும் வழங்கப்பட்டன.இந்த நான்கு வகுப்புகளை ஒரு தனிநபர் ஆண்டுக்கு எத்தனை மரக்கால் (புஷல்) தானியங்களை உற்பத்தி செய்வார் என்பதைக் கொண்டு வரையறுத்தார்.


  • பென்டகோசியோமெடிம்னி - "500 மரக்கால் விளைவிப்பவர்கள்", ஆண்டுக்கு 500 மரக்காலுக்கு மேல் விளைவிப்பவர்கள் படைத்தளபதிகளாக பொறுப்பேற்கலாம்
  • இப்பையிசு - குதிரைப்படை வீரர்கள், தங்களுக்கான குதிரையையும் ஆயுதங்களையும் தாங்களே கொண்டுவரக்கூடியவர்கள் - இவர்களது ஆண்டு விளைச்சல் 300 மரக்கால்களாக மதிப்பிடப்படது
  • சீயுகிட்டெ - விவசாயிகள், ஒரு சோடி மிருகங்களையாவது கொண்டவர்கள், ஆண்டு விளைச்சல் 200 மரக்கால்களாக மதிப்பிடப்பட்ட இவர்கள் ஈட்டி/கேடய வீரர்களாக, குடிமக்கள் வீரர்களாக (ஹோப்லைட்டுகள்) பணி புரியலாம்.
  • தீடெசு - உடல் உழைப்புத் தொழிலாளர்கள்

சோலோன் வரிவிதிப்பையும் சமூக வகுப்பிற்கேற்ப அமைத்திருந்ததாக நிக்கோலசு ஹெமாண்டு கருதுகிறார். கடைமட்ட தீடெசுக்களுக்கு வரி எதுவும் இல்லாமலும் மற்ற மூன்று வகுப்பினருக்கும் 6:3:1 என்ற வீதத்தில் வரி வசூலிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Harper, Douglas (November 2001). ""Timocracy" etymology". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வர்_ஆட்சி&oldid=1576125" இலிருந்து மீள்விக்கப்பட்டது